ஒரு கொத்தடிமையின் குமுறல்
கனவுகளோடு களம் இறங்கினேன்
கண் முட நேரமில்லை.. கரைந்தது கனவுகள் கண்ணீர் எனவே
கற்பனையில் திளைக்கிறேன் கண்ணிமைக்காமலே
விற்பனையில் விரையம்
விரும்பாமலே....
மீட்போர் யாரும் இன்றி அறையப்பட்ட சிலுவையில்... "மீட்பர்.."மட்டுமல்ல நாங்களும்...
தடை செய்யப்பட்ட யாவுமே நடைமுறையிலே
தடை கோர யாரும் இன்றி அடிமை நிலையிலேயே
நாட்டைக் காக்க அரசு தானே சம்பளம் கொடுக்குது அதிகாரி வீட்டைக் காக்கும் வேலை தானே நிதமும் நடக்குது...
காவல் பணி என்று தானே நானும் ஏற்கிறேன்...
ஏவல் பணி இன்று வரை நானும் பார்க்கிறேன்...
அரசு அரசியல் துறை இரண்டிலுமே அல்லக்கைகள் அதிகம்... அதிகாரி வர்க்கமும் விதிவிலக்கல்ல...
பலவித கடுமையான பயிற்சிக்கு பிறகு தான் பதவி ஏற்கிறோம்... பயிற்சிக்கும் வேலைக்கும் சம்பந்தமில்லை.. நானும் தோற்கிறேன்
அரசு வேலை என்பதுவும் அடிமை வேலையே..செக்கிழுக்கு மாடு சுற்றும் நிலையே
இடமாற்றம் பதவி உயர்வு எல்லோருக்கும் வாய்ப்பதில்லையே
இலவசமாக இங்கு ஏதும் கிடைப்பதில்லையே...
கடைக்கண்ணி போவதற்கு கடுமையான பயிற்சி எதற்கு
அடிமை சேவகம் செய்வதற்கு
அரசு சம்பளம் எனக்கு எதற்கு
மிதியடியாய் மிதிபடுவதற்கு மிடுக்கான சீருடை... எதற்கு
கால் பிடித்து வாழ்வதற்கு
கம்பீரம் கேடு பிணக்கு.....
வெளியே தெரிஞ்சா வெட்கக்கேடு
கடைநிலை ஊழியர் சாபக்கேடு
பதவி திமிர் படுத்தும் பாடு
கொழுப்பெடுத்த குடும்பம் பாரு
மக்கள் பணம் மண்ணா போகுது
மந்திரிகளாலே நாசமாகுது
அதிகார வர்க்கம் ஆட்டம் போடுது
அடங்கிட மோசமாகுது...
இவண்
ஆற்காடு குமரன்
9789814114