திருப்பி அடிக்க மாட்டேன் என்று திரும்பத் திரும்ப அடிக்கிறாய்.....
வலிக்க வலிக்க அடிக்கிறாய்
வலியில் உன் கை துடிக்க நீ வழிமொழிய வழிவழியாய் பிறரை வர வழைக்கிறாய் ....
சித்திரவதை செய்வதற்கென்று சிறப்பு குழுக்கள் வேறு... திருப்பி அடிக்க ஒரு நொடி போதாது....
திருப்பி அடிப்பது தீர்வு ஆகாது
என்றே திரும்பத் திரும்ப அடி வாங்கிக் கொண்டிருக்கிறேன்..
உன் வியர்வை வாடையை விட எனது ரத்த வாடை அறை எங்கிலும் வீசும்
மழையும் வெயிலும் கூட மாறி மாறி அடிக்கிறது நீ மட்டும் ஏனடா மிருகமாய் இருக்கிறாய்..
மேலிடத்து உத்தரவு என்கிறாய்....
இடம் தாங்கி பிடிக்கவில்லை எனில் இல்லையடா உங்களுக்கு மேலிடம்
அனைத்து பணிகளையும் அடிபணிந்து அடிமை சேவகம் செய்கிறாய்.... அம்பு தான் தைக்கும் வில் வீனே கிடக்கும்...
அவன் பிள்ளைக்கு நீ அப்பனாகும் நேரம் தான்... அதிகார வர்க்கத்தின் சொப்பனங்கள் மாயும்....
ஒவ்வொரு உயிருக்கும் ஒரு விலை இருக்கு உன் உயிரு பிரியும் முன்னே தீர்க்கும் கணக்கு
நல்ல பெயர் எடுக்க வேண்டி நரபலி கொடுக்கிறாய்
அப்பாவிகளைக் கொன்று அதிகாரம் பெறுகிறாய்
நற்பதவி நீ அடைய வேண்டி சிவலோகப் பதவி எனக்கு அளிக்கிறாய்...
அடுக்களை முதல் அனைத்து அறைகளிலும் நீ இருக்கிறாய் படுக்கையறை என்ன விதிவிலக்கா...
திருப்பி அடிக்கும் காலம் வரும் திருப்பி அடிக்கும் நேரம் உங்கள் கர்வம் தீர்ந்து போகும்....
சிறைச்சாலையில் மரணித்தவர் சிந்தும் குருதியும் கண்ணீரும் குழைந்து உங்களின் குருர முகங்களை பிரதிபலிக்கின்றன...
குற்றவாளிகளே ஒன்று கூடுங்கள் இந்த கொலையாளியை கொன்று தீருங்கள்
ஆயுதம் இன்றி நேருக்கு நேர் நின்று பாருங்கள் நேர்மை வெல்லும் அன்று கூறுங்கள்
இத்தகைய மரணம் இதுவே இறுதியாய் இருக்கட்டும்....
தொடரும் தூர் மரணங்கள் உங்களையே துய்த்திடும்
உக்கிரம் மாய்த்திடும்...
இவண்
ஆற்காடு குமரன்
9789814114