அழகொழுகும் வதனமதில் மதுரமிகு அதரமது உதிரமதுத் துளியுமிது...
பளிங்கு பவழமென உதரமதில் கவின் சுழியின் கவர்ச்சியதில்
இழைத்திட்ட தேக்கெனவே தேகமிங்குதான் மிளிர
தாபத்தின் தாகத்தில்
மோகத்தில் தான் பிளிற..
கரு வான திரட்ச்சியோ உருவான புரட்சியோ கார்குழல் வளர்ச்சியோ நிழலென இட பெயர்ச்சியோ
இரு மருங்கில் மலை முகடு
இடையிலோரெழில் பிளவு...
குதிகால் தான் பதிய குவளையங்கள் தானசைய தளிர் மேனி தானசைந்த பூந்தோட்டம் நான் கடக்க...
வாடைக்காற்று வாசமானது
வியர்வை நறுமண திரவியமாமே
பசுமையின் செழுமையிது இளமையின் வளமையது
பார்த்திட புதுமையிது
பாவை பதுமையிது
வரப்போற குலத்தினிலே
கயல் மீன்கள் துள்ளிடவே
கரையோர கண்ணிமை சாமரம் வீசிடவே
கண்மலர் இதழ்கள் திறக்குதய்யா கருவண்டு விழிகள் கதைக்குதய்யா
சுழற்றி நாளும் மிரட்டுதய்யா
சுந்தர மறைக்க விரட்டுதய்யா
இவண்
ஆற்காடு குமரன்
9789814114