நாணம்
@@@@@
நாணம் நங்கை உடைமை அல்ல
அல்லது செய்திட நாணும் நல்லோர்
நல்லோர் இடையே நாளும் வாழும்
வாழும் காலம் சூழும் யாவும்
யாவும் மேவும் நன்மை ஆகும்
ஆகும் எல்லாம் ஆக்கம் தானே
தானே தன்னை சோதித்து கொள்ள
கொள்ளும் வகையில் கூடும் நாணம்
இவண்
ஆற்காடு குமரன்
9789814114