அந்தக் காலம் பொற்காலம்
இந்த காலம் பொற்காலம்
எந்த காலம் கற்காலம்
எல்லாம் இன்று அலங்கோலம்....
ஊழலற்ற ஆட்சி பொற்காலம்...
கக்கன் காமராஜர் கண்ட களம் பொற்காலம்.. களவாணிகள் நுழைந்தது இக்காலம்
சேவை செய்தது அக்காலம் தேவைக்கு என்று செய்வது இக்காலம்....
பண்புக்கு மதிப்பு இருந்தது அக்காலம் பணத்திற்கு மதிப்பு இருக்கிறது இக்காலம்
அன்புக்கு குறைவில்லை அக்காலம்.. அன்பினால் அடிமையாய் பலர் இங்கு இக்காலம்
உண்மைக்கு குறைவில்லை அக்காலம்... உண்மை என்பது அண்மையில் இல்லை இக்காலம்
கூட்டுக் குடும்பம் அக்காலம் கூட்டே இல்லை இக்காலம்
காதல் இருந்தது அக்காலம் காமம் நிறைந்தது இக்காலம்
சத்திரம் இருந்தது சத்தியம் இருந்தது அக்காலம் இரண்டும் இல்லை சரித்திரம் இல்லை இனி வரும்
காலம்...
அறிவியல் இல்லை அறிவு செழித்தது அக்காலம்... அறிவியல் செழித்தது
அறிவிலி மிகுந்தது இக்காலம்...
உழைத்து உண்டி வளர்த்தோர் அக்காலம் தழைக்க உண்டி குலுக்கோவோர் இக்காலம்...
இறைவன் என்பது நம்பிக்கையாய் இருந்தது அக்காலம் இறைவன் நம் கையை நம்பி இருப்பது இக்காலம்
பொற்காலம் என்பது கற்காலம் அல்ல... கற்றிடும் காலமே பொற்காலம்
பொறாமையற்றதே பொற்காலம்..
பெற்றிடும் யாவையும் பிறர்க்களிக்க பேரின்பம் பெரும் நேரம் யாவையும் பொற்காலமே....
இவண்
ஆற்காடு குமரன்
9789814114