Type Here to Get Search Results !

பல்லக்கு

 பதர்களை பல்லக்கில் சுமக்கும் 

பாவச் செயல்களை செய்யாதீர்கள்....

சவங்களை மட்டுமே சகமனிதன் தோளில் சவாரி செய்யும்.......


மனித மலங்களை அள்ளும் மனித அவலத்திற்க்கு ஒப்பானது மனிதனை மனிதன் சுமப்பது....


தெய்வம் மட்டும் தேரில் இல்லையாதலால் தேவையற்றவர்கள் இருந்ததால் தேவையற்ற உயிர் சேதம்........


தூணிலும் துரும்பிலும் இருக்கும் ஆண்டவன் ஏன் மின்கம்பியில் இருக்க மாட்டானா என்ன.....


உன்னை சுமந்த தாய் தந்தையை நீ சுமப்பது தவறு இல்லை.. ஊனமுற்றோரை உயர்த்திப் பிடிப்பதும் தவறே இல்லை....


ஞானம் கொண்டவன் யாவரும் இங்கே எவரையும் ஏளனம் செய்வது என்றும் இல்லை.....


பாமரனிங்கே பட்டினியில் பசிப்பிணி பிரவேசம்... தீர்க்க இயலாதோர்க்கு

தீர்த்த யாத்திரை எதற்கு பட்டின பிரவேசம் என்ற பரிவாரம் எதற்கு......


ஆசைக்கு அப்பாற்பட்டவன் தான் ஆன்மீகவாதி சவாரி செய்ய ஆசைப்படும் இவன் சர்வாதிகாரி.....


பல்லக்கில் பவனி கௌரவம் என்றால் அது கர்வத்திற்கான அடையாளம்....


தலைக்கணம் இல்லாதவன் தான் தன்னிலை உணர்ந்து முன் நிலை அடைய முடியும்..... 


தன்மானத்தை சிதைக்க வரும் அவமானம் கூட

அமைதியாய் இருப்பவனுக்கு ஒரு பிடிமானம்.....


நடக்க முடியவில்லை என்று ஒப்புக் கொள்ளுங்கள் நான்கு பேர் தூக்க வருவார்கள்..... 


நடுவீதியில் சவமாய் இருங்கள் நல்லுள்ளம் கொண்டோர் அடக்கம் செய்வார்கள்.....


எந்த சாயமும் எனக்கு இல்லை எல்லாம் மாயம் என்று நான் உணர்ந்ததாலே...

நம்மை நாமே சுமப்பதில்லை நமக்கு எதற்கு பிறரின் சுமை....


உடலுக்குள் உயிர் உள்ளவரை தான் இந்த ஆணவம்....இந்த ஆகமம்...

உயிர் தான் கடவுள் என்ற பின்னே

உயர்வு தாழ்வு உனக்குள் எதற்கு


இறந்தவர் யாவரும் இறைவனடி சேர்ந்தார் என்ற பிறகு..... இறைவனின் அடியார் தானென்றுரைக்கும் நீ

இறவாதெப்படி சாத்தியமாகும்


உயிருள்ள மனிதர்களின் உணர்வுகளை மதிக்காத எவரும் உயிரற்ற பிணத்திற்கு சமம்......


பல்லக்கு பவனியும் வேண்டாம்... பலருக்கு சுமையாகவும் வேண்டாம்

நல்லடக்கம் போதும் நமக்கு....

நாவடக்கம் போதும் அதற்கு....


உண்மையை உரக்கச் சொன்னேன் உணர்வு இருக்க எடுத்துச் சொன்னேன்

உணருதல் உமக்கு அழகு...

உணர வைத்தல் எனக்கு அழகு...


இவண்

ஆற்காடு க குமரன்

9789814114

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.