இரு வேறு திசையில் பயணிக்கிறோம் மண்ணில்...... நம் எண்ணங்கள் மட்டும் ஒருங்கிணைந்து ஒரே திசையில் பறக்கின்றன வானில்
ஏதுமில்லை என்று தெரிந்தும்
ஏற்க மறுக்கிறது மனம்...
ஏற்றுக்கொள்ள முடியாமல்
தூற்றுகிறது தினம்....
காலனின் அழைப்புக்காக காத்திருக்கிறோம் கல்லறை யிலாவது கரங்கோர்ப்போம் என்று.......
நீயும் நானும் சந்திக்கவே இல்லை....சிந்திக்க நேரம் போதவில்லை என்று நேரத்தை நிந்திக்கிறோம்.......
சந்திக்க நேர்ந்து விட்டால் இந்த பிரபஞ்சம் போதாது இந்த பிறவியும் தீராது..........
சந்திக்காமலே இருப்போம் சகியே சத்தியம் காதல் என்றால்.....
நிச்சயம் ஒருநாள் வெல்லும்......
பூலோகம் மேலுலகமாகும்....
இவண்
ஆற்காடு க குமரன்
9789814114