எழுந்து வா எழுத்துக்கள் காத்திருக்கின்றன....
எழுத்தாணி ஆளவில்லையென விதவை கோலத்தில் வெள்ளைத் தாள்கள்
எங்கெங்கோ அலைகின்றன எண்ணங்கள்....
எழுந்து வா அடக்கியாள....
எழுத்தாணியா
தலை எழுத்தா.....நீயா
மையிட்டு கருவேற்றினாய்
கவிதையாய் உருவேற்றினாய்
மெய் சிலிர்த்தது
மை ஜொலித்தது
மெய்மறந்தது
மை இழந்ததில்
உண்மை தெரிந்தது
தொடுத்த வார்த்தைகள் உன்னை தொடர்கின்றன.... அடுத்த வார்த்தை என்னவென்று ஆவலுடன்.....
எழுந்து வா எழுத வா
எழுப்புகின்றன எழுத்துக்கள்
ஆ .....என்ற ஒற்றை எழுத்தில்
அலறுவது புரிகிறது
ம்... என்ற ஒற்றை வார்த்தையில் சம்மதம் சொல்....247 எழுத்துக்களும்
24*7 உனக்காக எழுந்து நிற்கும்
எழுத வருகிறேன்
எழுந்து வருகிறேன்
விதவைத் தாள்களை எல்லாம்
விரும்பி மணக்கிறேன்
விதைகளைத் தூவி கவி மழலை
அரும்பிட மகிழ்கிறேன்...
தலைஎழுத்து தமிழ் என்பதால்
தலையெடுத்து வருகிறேன்
களையெடுக்க வருகிறேன்....
களைப்பை மீறி வருகிறேன்
இவண்
ஆற்காடு க குமரன்
9789814114