இறந்தகாலத்தை
விட்டுவிடு அது நீ தொலைத்ததில் ஒன்று
நிகழ்காலத்தை நீ எப்படி எதிர்கொள்கிறாயோ அப்படியே உன் எதிர்காலம் அமைகிறது
எது வந்தாலும் எதிர்கொள்ள துணிவிருந்தால் எதிர்காலம் நம் கையில்
நாளை தேவைப்படும் என்று இன்று எரிபொருளை சேர்த்து வைத்தால் நாளைய பயணம் நலமாகும்
சட்ட திட்டங்களைப் பற்றி கவலைப்படாதே அது
சர்வாதிகாரிக்கும் சாமானியனுக்கும் மாறுபடும்
சர்வாதிகாரியாகவே இரு உன்னை பற்றிய சர்வ அதிகாரமும்
நீயே முடிவு எடு
முக்காலமும் உந்தன் கையில் எக்காலமும் அதை நீ மறவாதே
எதிர்காலத்தைத் தெரிந்து கொள்கிறேன் என்று எவன் முன்னிலும் போய் நிற்காதே அவன் எதிர்காலம் அவன் எதிரில் உன் வடிவில்
திட்டமிட்டு செயல்படு தவறிப் போனதை எண்ணி நீ தவறு இழைக்கலாமோ
தலைவிதியை துணைக்கு அழைக்கலாமோ
விதித்தவனுக்கே தெரிவதில்லை விடியல் எப்போது என்று
கால நேரத்திற்கு ஏற்ப காட்சிகள் மாறிக் கொண்டிருக்கின்றன.......
இறந்தகாலம் கற்று கொடுக்கும் நிகழ்காலம் கற்றுக்கொள்ளும்
எதிர்காலம் பலனைப் பெற்று வெல்லும்
முக்காலமும் நம் கையில் என்று உணர்ந்தவன் எக்காலமும் தோற்பதில்லை....
கடந்ததை நினைத்தால் இறந்த காலம் கடக்க வேண்டியதை நினைத்தால் எதிர்காலம் கடந்து கொண்டிருக்கிறாயே அதுவே நிகழ்காலம்......
தூரத்தை என்னை துயரம் கொள்ளாதே துணை நிற்கும் உன் நம்பிக்கை....
துவளாமல் நட தூரத்தில் இல்லை எதிர்காலம்..... உன் துணிவினில் இருக்கிறது........
துணிவுடன் நடைபோடு
தோ..... தொட்டுவிடும் தூரத்தில்
உன் எதிர்காலம்.....
இவண்
ஆற்காடு க குமரன்
9789814114