சுடுகாடு எனக்குள்ளே இருக்கிறது....... சுவைத்து அரைத்து மென்று முழுங்கி
கழிவாய் இறக்கி கடந்து போகும் நடமாடும் சுடுகாடு நானே.......
சத்தை உறிஞ்சி
சக்கையை வீசுவதைப் போல
தேவைக்கு பயன்படுத்தி விட்டு தேவை இல்லை என்று வீசுவதைப் போல
புதைத்த பின்னே மீண்டும் தோண்டி முகர்ந்து பார்க்க முடியாது பிணம் மட்டுமல்ல மலமும்
நடமாடும் சுடுகாடு நாம் என்றால் நம்பவா போகிறீர்கள் கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்......
வாயில் போட்டுக் கொள்வது
மயானம் மட்டுமல்ல மனிதர்களும் தான்
வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு... வாயில் போட்டுக்கொள்ள மயானம்......
எல்லா உயிர்களையும் உள்ளே போட்டுக் கொள்ளும் ஒரே உயிர் மனிதன் மட்டுமே.... எல்லா அறிவையும் ஆறு அறிவு அழித்துக் கொண்டிருக்கிறது
என் சரீரம் தான் எனக்கான சமாதி என் ஆசைகள் தேடல்கள் அனைத்தையும் அடக்கம் செய்கிறேன்.... உணர்வுகளை உறையச் செய்கிறேன் என்னை நான் உணர்கிறேன்.......
ஒலியும் அடங்கிப் போகும் போது ஒளி மட்டுமே மிஞ்சும்.... இதயத்தில் நீ ஏற்றி வைத்தும் தீபம் ஒளி
ஒலியும் ஒளியும் மட்டுமே வாழ்க்கை இந்த உயிர் உனக்குள் ஒளிந்து கொண்டிருக்கிறது அதன் வேட்கை தீர்ந்ததும் பிரிந்து போகும்......
உள்வாங்கும் காற்று ஓய்ந்து போனால் ஒலி முடங்கிப் போகும்
உள் வாங்கும் காட்சி ஓய்ந்து போனாள் ஒளியும் தீர்ந்துபோகும்.....
இரு விழிகள் மூடி இருந்தாலும் இதயம் திறந்து இருக்கட்டும்.... அதில் இருள் இல்லாமல் பார்த்துக்கொள்......
கடைசியில் கழிவாய் போகும் நம் சரீரத்தை சுத்தமாக்கு....... உன் இதயத்திற்குள் நீ ஏற்றி வைக்கும் தீப ஒளியின் திரியாயிரு.....
தீயாக இரு.....
நல்லவர்களை வாழ வைக்கும்
தீப ஒளியாய்....
தீயவரை எரிக்கும்
தீச்சுடராய்...இரு....
என் ஜீவனை நான் உள்ளடக்கி ஜீவசமாதி ஆகிறேன்.....
ஜீவனை அடக்காத சமாதிகள் எல்லாம் பாவ சமாதி என்கிறேன்.....
இவண்
ஆற்காடு க குமரன்
9789814114