அடி தாங்காமல் தோல் கதறுது
குறுக்கும் நெடுக்குமாக குழல் புகும் காற்று குமுறல் கேட்குது...
வளைந்து நெளிந்து ஓடும் நீரோ சலசலக்குது வானின் மழை விழும் போது மண் மணக்குது...
புயலு வேதம் ஓதும் போது மரங்கள் எல்லாம் சாமி ஆடுது... வயலு சேற்றில் காலை ஊன்ற நீரும் துள்ளுது....
உளியின் வலியை தாங்காம கல்லும் அழுவுது... சிலையாக வேண்டும் என்று வலியை தாங்குது...
இயற்கையில் எழும் ஓசையை தான் கருவி இசைக்குது.. இயல்பை உணரா மானிட மனம் இறுமாப்பு கொள்ளுது...
இசைப்பவன் தன்னை மேதையென எண்ணி திரிகிறான்.. புகழும் ஒரு போதை என புரியாமல் புழுங்கிச் சாகிறான்..
உலோகத்தின் தன்மை கொண்டு ஒலியும் பிறக்குது..உரிமை கோரும்
அறிவிலியால் கலகம் பிறக்குது
கருவிகளின் கதறல் இசை என்பேன்....கருமி உரிமை கோருவதேனோ....
தொப்புள் கொடி அறுபடுகையில் துவங்கும் அழுகை... தொன்றுதட்டு தொடர்வதும் ஏனோ...
உணர்வுகள் மூலம் ஒலிகள் நாளும்... வலியை உணராது வஞ்சிப்பதும் வீணோ....
காற்று இல்லை எனில் உச்சரிப்பு இல்லை....காதுகள் இல்லை எனில் கரவொலியும் இல்லை....
ஆய்ந்து அறியாத அறிவிலி இவனோ
அடங்கும் நேரம் முழங்கும் பறையும் இவன் இயக்கம் தானோ....
இவண்
ஆற்காடு குமரன்
9789814114