மருதாணி மருந்தா நீ என்னவள் கைகளுக்கு விருந்தா நீ....
சிவந்த இதழில் ஒற்றி எடுத்த சித்திரமா...
மனமுவந்து நீ இழைய இது என்ன சத்திரமா...
சாயம் என்றால் மாயம் ஆகும் தாபம் கொண்டால் தாகம் தீரும்
சிவப்பு சூரியன் அவள் உள்ளங்கையில்....
வெட்கத்தில் சிவந்த கன்னங்களை வருடிய விரல்களின் நுனியும் சிவப்பு
நாளத்து உதிரத்தின் நர்த்தனமோ
நாணத்தின் நிறம் சிவப்பினமோ
வறுமையின் நிறம் சிவப்பு அல்ல
வனப்பின் நிறம் சிவப்பு.. செழிப்பு
கோலமிடும் பாதங்களிலும் கொவ்வையிதழ் சிவப்பு
மனதில் காதல் இருந்தால் மருதாணி சிவக்கும் என்றார்கள்
உண்மைதான் உன் மனதில் நான் உள்ளங்கையில் தான்...
இவண்
ஆற்காடு குமரன்
9789814114