உயிருக்குயிரான காதல் என்பது வாழ்வில் ஒரு முறையே....
அடுத்து வரும் காதல் யாவும்
சூழ்நிலையின் சூத்திரங்களே
அன்பினால் தோன்றும் காதல் ஆற்றாமையினால் தோன்றும் காதல்
ஈர்ப்பினால் வந்த காதல்
வார்ப்பினால் மலர்ந்த காதல்
வசீகரம் விளைவித்த காதல்
வசியம் செய்யும் காதல்
பரிவினால் தோன்றும் காதல்
பிரிவினால் ஊன்றும் காதல்
தேகத்தின் பால் கொண்ட காதல்
மோகத்தினால் கொண்ட காதல்
தாபத்தினால் மூண்ட காதல்
காமத்துக்காய் கலவிய காதல்
வெட்கத்தினால் வந்த காதல்
வெள்ளந்தியாய் கொண்ட காதல்.
பருவத்தினால் வந்த காதல் உருவத்தினால் கொண்ட காதல்
அருகாமையில் ரசித்த காதல் அணைத்ததனால் துளிர்த்த காதல்..
விரக்தியை விரட்டும் காதல் வெக்கையை போக்கும் காதல்
விரும்பியதால் விளைந்த காதல்..
அரும்பியதால் அடவிய காதல்
முன்னது உயிரின் ஊற்று
பின்னது உணர்வின் ஊற்று
காதல் என்பது மென்மை உணர்வு
காமம் ஒரு வன்மை திணவு
இரண்டும் கலவிட உன்னத நினைவு
இமைகள் நனையும் தந்திடும் பிரிவு
வயோதிகத்திலும் வந்தது காதல்
வாஞ்சையுடன் மூண்டது காதல்
பிரிவு பிணமாக்கும் காதல்
உணர்வை புதுப்பிக்கும் காதல்...
உறவு உயிர்த்தெழச் செய்யும்
பிரிவு உருகுலைக்க உய்யும்
இவண்
ஆற்காடு குமரன்
9789814114