எரியும் விரகோ
யாக்கை
கலையும்
கனவோ வாழ்க்கை
நிலையும் உளதோ
கலயம்
உடையும் அவயம் கலயம்
திடலை அடையும் சமயம்
சிதறும் கலயம் அவயம்...
உதறும் சமயம் பதறும்
பதறும் நேரம் கதறும்
சொரியும் மழையோ மேகம்
கழிவை களைந்து போகும்
ஒளிரும் நிலவும் கூட
கதிரும் வர ஓடும்
நிலவு வரா நாளும்
கதிரும் கருத்துப் போகும்
யாதும் இங்கு நாளும்
நிலை அற்று போகும்
வாழும் வகை கொண்டே
வாழ்க்கை நிலையாகும்
ஆற்றும் வினைகொண்டே
ஏற்றம் பெறக்கூடும்
விழுந்த விதை யாவும்
எழுந்து நிற்க கூடும்
பழுத்த இலை உதிரும்
துளிர்க்கும் தளிர் மேலும்
புதைத்த விதை யாவும்
விண்ணை தொடக்கூடும்
வதைத்து கதைத்த யாவரும் சிதையில் வந்து சேரும்
நீயும் நானும் இங்கு பிச்சை பாத்திரம் தானே
தாயும் தந்தை சேர்ந்து வடித்த இச்சை சித்திரம் காணேன்..
ஏதும் இல்லை கையிருப்பு
இருப்பை நிலை நிறுத்து
தீதும் இல்லை உன் பிறப்பு
தீராதிருப்பது உன் சிறப்பு
இவண்
ஆற்காடு குமரன்
9789814114