மழைநீரை சேர்த்து வைக்க துப்பில்லை..நதி நீரை இணைக்கவும் நாதியில்ல ..
அமிர்த நீர் வினியோகம் அறிக்கை இங்கு.. கோமியத்தை குடிச்சாக்கா உனக்கே சங்கு...
பைத்தியங்கள் மேடையிலே பரதேசிகள் சாடையிலே
உபதேசங்கள் தேவையில்லை
ஊதாரிகள் ஆட்சியிலே
வாய்மூடி கிடந்தாலே வாழ்ந்து விட்டு போகலாமே...வாயை கிளற பார்த்தாலே வசை பாட தோன்றிடுதே
தடை செய்யப்பட்ட அமைப்பு
தலை தூக்க நினைப்பு
நிலைப்படுத்த முனைப்பு
நிக்காதடா உங்கள் நடிப்பு...
வியர்வை நீரை சுரண்டி விற்கும் வியாபாரிகள்.. குருதியை குடிக்கின்ற அகோரிகள்.. கோமியத்தை அருந்தும் கோமாளிகள்....
மதக் கலவரம் தூண்டுகின்ற மடையர்கள்.. கள நிலவரம் அறியாத கழுதைகள்..
சகோதரத்துவம் குலைக்கின்ற சனியன்கள்.. பிரிவினையை விதைக்கின்ற பிண்டங்கள்..
தன் வினையே தன்னைச் சுடும்
உண்மை உணராதவர்கள்..
முன்வினைப் பயன் உன் வினை பயன் அறிவார்கள்...
அமிர்த நீர் அவசியமல்ல
உங்கள் கண்ணீர் அமில நீராகும்
வியர்வை விதைந்திடக் கூடும்
உயர்வை அடைந்திடலாகும்...
இவண்
ஆற்காடு குமரன்
9789814114