ஊழலைப் பொறுத்தே உனக்கு
உயர் பதவி...
கையாடல் செய்தவன் எல்லாம் கைக்கூலிகள் ..
லஞ்சப் பேர்வழிகள் தஞ்சம் புகும் கட்சிகள்....
அடிப்படை தகுதி அடியாட்கள் வேலை....
குற்றவாளிகளே கூட்டாளிகள்
கொள்கை முரண்பாடு கொண்டவர்களோடு கூட்டணி
கையிருப்பு உள்ளவனுக்கு
கட்சியில் இடம்...
முள்ளமாரி முடிச்சவிக்கிக்கு முன்னுரிமை...
பஞ்சம் பிழைக்க வந்த கூட்டம் தான் நஞ்சும் விதைத்தது ...
தஞ்சம் புகுந்த கூட்டம் விதைத்த நஞ்சும் இனித்தது
கொஞ்சம் மிஞ்சும் விஞ்சும் வேளை நஞ்சுறைத்தது
நஞ்சுறைக்க நெஞ்சரித்தது
சஞ்சரித்த யாவும் சதி என புரிந்தது...
கல்வி தகுதி தேவையில்லை கட்டப்பஞ்சாயத்து போதும்
முன் அனுபவம் தேவையில்லை முரட்டு உருவம் போதும்
பதவி வகிக்காதவன் பரிசுத்தமானவன்...
பதவி வகித்தவன் பறித்து பழித்து தின்றவன்....
வழக்குகள் இல்லாத வேட்பாளர் இல்லை....
குற்றவாளி அல்லாத அரசியல்வாதி இல்லை...
கல்வித் தகுதி தேவையே இல்லை
மேடை நாகரிகம் அவசியம் இல்லை
அடிப்படை அறிவும் தேவை இல்லை
கூன் விழுந்து கிடந்தால் போதும்
நாவினால் தாள் தழுவிட லாபம்
நம் நாட்டின் அரசியல் சாபம்...
இவண்
ஆற்காடு குமரன்
9789814114