தெரியாமல் விழுகிறேன்
தெளிந்து எழுகிறேன்
புரியாமல் திகைக்கிறேன்
புரிந்ததும் நகைக்கிறேன்...
நினைவினை இழக்கிறேன்
மறதியுடன் இயைகிறேன்
போக வர பார்க்கிறேன்
போகும் பொழுதை மறக்கிறேன்
சிந்தனையில் உழல்கிறேன் செயல்பட மறுக்கிறேன்
இடறாமல் நடக்கிறேன்
இலக்கின்றி தவிக்கிறேன்
சாவை தழுவினேன்
பூவை சிதைக்கிறேன்
முதுகில் குத்துவது புரிகிறது
முறுவல் காண எரிகிறது
துரோகிகள் முன்னே துளிர்க்கிறேன்
தூக்கத்தை பறிக்கிறேன்
பறித்த குழியின் குவிந்த மண்
குன்றெனக் கண் முன்னே...
காலில் விழுந்து கதறிய அலை
காலடி மண்ணை கவர்ந்தது பிழை
பொறாமை எழும் மனதில்
பொறுமை இருக்காது....
கனிவுள்ள கண்களுக்குள்
கண்ணீர் நிச்சயம்....
எழுதப்படாத கவிதை
வாசிக்கப் படாமலே போகிறது...
முரண்பாடாகத்தான் தெரியும் முன்னேற்பாடு இல்லாத செயல்கள்
இவண்
ஆற்காடு குமரன்
9789814114