Type Here to Get Search Results !

எடுப்புக்கு துடுப்பு

 அடிமாட்டுத் தொண்டர்கள் பலியாடுகள்... அறியாமை பாவத்தின் பெரும் சாபங்கள்....


கடவுள் இல்லைன்னு சொன்னாங்க கல்வி இருக்கா சொல்லுங்க....

காசு இல்லைனா ரெண்டும் இல்லை தீட்டு தள்ளி நில்லுங்க...


மேடைப்பேச்சு தொண்டனுக்கு சொந்தம் இல்லையா ...

உடன்பிறப்பே என்பதெல்லாம் குடும்ப உருட்டலா...


ரத்தத்தின் ரத்தம் என்று சொன்னாங்களே... ரத்த உறவு ஏதுமின்றி நின்னாங்களே....


தொண்டை வரைக்கும் இறங்கினாலும் தொண்டை தண்ணி வத்தினாலும்.. தொன்று தொட்ட அடிமைகள் தொண்டர்கள் எனும் எருமைகள்...


மாறி மாறி ஓட்டு போட்டு வாட்டம் இன்னும் தீரல... ஏற்றம் எதுவும் காணல.. போற்றும் படி மாறல...


தலைவனோட புள்ள மட்டும் வெளிநாட்டுல சுத்துது தொண்டனோட பிள்ளைகளோ தருதலையா திரியுது...


எந்தத் தலைவன் பிள்ளையும் சொந்த நாட்டில் படிக்கல... எந்த தொண்டன் பிள்ளையும் எந்த நாட்டிலும் படிக்கல..


மொழி திணிப்பு என்று சொல்லி மூளைச் சலவை செய்யுது...

வழி வழியா சொல்லி சொல்லி வாழ்வாதாரத்தை அழிக்குது...


ஆறறிவு உனக்கு எதுக்கு ஆய்ந்து அறியத் தானே.. நீ ஓய்ந்திருப்பதும் வீணே...


திரைகடலோடியும் திரவியம் தேடிய 

முன்னோர் யாவரும் பன்மொழி கற்றோர்...


திரைகடலோடியும் இருப்பினை நிரப்பிய இன்னோர் யாவரும் நம்மொழி விற்றோர்....


நீர் அடித்து நீர் விலகுவதில்லை 

மொழி அழித்து ஒரு மொழி வாழ்வதில்லை...


இழிநிலை களைவோம்..வாழும் வழி நிலை உணர்வோம்... சூழும் தீவினை களைவோம்... தீவல்ல நாம் ஒருங்கிணைவோம்....


விலங்குகள் யாவற்றிற்கும் ஒரே அறிவு.. திறனை பொறுத்து திடத்தை பொறுத்து...


தாயை மாற்ற முடியாது 

தமிழை அழிக்க இயலாது 

தறுதலைக்கு இது புரியாது...


அரைச்ச மாவு அரைச்சதெல்லாம் போதும்டா... அறிவுக் கண்ணை நீயும் திறந்து கானடா.. அடிமை வாழ்க்கை 

இன்னும் உனக்கு ஏனடா...


குடியுரிமை காத்து

குலக் கொடியை நாட்டு 

வீசும் காற்று நம் பக்கம்

வெற்றி நமதே எட்டுதிக்கும்...


இவண் 

ஆற்காடு குமரன் 

978984114


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.