என் மழலைப் பருவம் அழகுதான்
எதிரில் என்னை ரசித்த என் தந்தை
இருந்ததால்
என் பால பருவமும் அழகு தான்
விளையாட்டு பொம்மைகளை வீட்டில் நானும் அப்பாவும் மட்டுமே
என் பள்ளிப் பருவமும் அழகுதான்
பாடசாலை ஆசிரியர் பக்குவபடுத்தியதால்
என் இளமைப் பருவமும் அழகுதான்
என் இனியவள் என்னை ரசித்ததால்
என் வாலிபப் பருவமும் அழகுதான்
என் வாரிசு என்னை ரசித்த தால்
என் முதுமைப் பருவமும் அழகுதான்
என் வாரிசின் வாரிசு என்னை ரசித்ததால்
என் வாழ்க்கை முழுவதும் அழகுதான் என்னை நான் ரசித்ததால்
என் மரணமும் ஒரு அழகுதான்
பிரிந்த என் உயிர் அலங்கரிக்கப்பட்ட என் உடலை ரசிப்பதால்
என் கல்லறையும் ஒரு அழகுதான் காட்சிப் பொருளாக இருப்பதால்....
ரசனையுடன் பார் எல்லாம் அழகுதான்
ரசனையுள்ளவர்களுடன் வாழ்ந்து பார் நீயே அழகுதான்.......
உற்று ரசித்துப் பார் இந்த உலகமும் ஒரு அழகுதான்....
இவண்
ஆற்காடு க குமரன்
9789814114