உரிமைக்கு குரல் கொடுத்தவன் குரல்வளை நெறிக்கப்படும்...
உண்மையை உரக்கச் சொன்ன உரைகள் சிதைக்கப்படும்....
தனிமனித உரிமை என்பது
தட்டி கேட்பது
தனிமனித ஒழுக்கம் என்பது
கட்டி காப்பது
தனிமனித சிந்தனை என்பது தன்னை மீட்டெடுப்பது...
தனிமனித சுதந்திரம்
பிறரை மனிதனாக மதிப்பது
தனிமனித வாழ்க்கை என்பது
பிறரை நல் வழி வகுத்தலே....
தனிமனித சிந்தனையை முடக்கும் வலிமை காலத்தைத் தவிர வேறு எதற்கும் கிடையாது...
காற்று உள்ள போதே தூற்றிக் கொள் என்பதை போல காலாவதியாகும் முன் சிந்தித்திடு...
போதையும் பாதையில் இடறாமல் வாதையின் பிடியில் மடியாமல்
பேதையின் மடியில் சிதையாமல்
தேவை என்ன சிந்தித்திடு
தீர்வு என்ன...? சிந்தித்து அடு..
இவண்
ஆற்காடு குமரன்
9789814114