இடது கை பழக்கம் இல்லை என்றால் என்ன இயங்குவது என்னவோ இடது கை தானே
காலை கடன் துவங்கி கையேந்தி எழவும் முன் வந்து நிற்கும் பின் நொந்து வலிக்கும்
குழவியென குடம் சுமக்கும் இடது புறம் தானே... வலது புறம் என்றும் வலிக்காது தானே
இடதுபுறம் இதயம் காணேன்
நாடி பிடித்துப் பார்க்கையில் நடுக்கம் கூடும் தானே
இடது கை தானே இரக்க அறம் தோன்றும் இயங்குவதை கண்டால் அரிதாக ஆகும்
தாங்கிப் பிடிக்கும் இடது கை வாங்கி ருசிக்கும் வலது கை
இடது கை ஏந்தி பிடிக்கும் புத்தகத்தின் பக்கங்களை வலது கை புரட்ட கூடும்
இடது பக்கம் ஈர்ப்பு சக்தி அதிகம் வலது பக்கம் வார்ப்பு சக்தி அதிகம்
மகிழுந்து ஆயினும் இட கையே இயங்குகிறது வலக்கை வட்டை
பிடிக்கிறது
இணையர் புகைப்படம் பாருங்களேன்.. இதயமாய் இயங்கும் இணையாள் இடப்புறம் அவளால் வளமாய் வாழும் கணவன் வலப்புறம்
இடது தேய்கிறது வலது வளர்கிறது
இரண்டும் ஒருங்கே ஒரு நாள் ஓய்கிறது
இரண்டும் ஒன்றென உணரா மானுடன்... ஒப்பிட்டு ஓலமிடுகிறது
உண்மையில் உருக்குலைந்து போகிறது....
இடதோ வலதோ இரண்டும் நமது
இந்த எண்ணம் தேவை நமக்கு
கண்கள் இரண்டு காணும் காட்சி ஒன்று... செவிகள் இரண்டு மடுக்கும் ஒலியோ ஒன்று..
நாசி துவாரங்கள் இரண்டு
நறுமணம் ஒன்று... நல்லதே நினைப்போம் நாமும் இன்று...
இவண்
ஆற்காடு குமரன்
9789814114