சொல்ல ஏதும் வார்த்தை இல்லை சொல்லுக்குள் அடங்கவில்லை....
எல்லை என்றும் உமக்கு இல்லை.. உலகில் நிகர் எவரும் இல்லை...
பாரதிக்கு தாசனா பாரதி தாசனா .. பைந்தமிழரின் வாசனா... "பா"விற்கு ஈசனா...
புதுவை உந்தன் பிரதேசமா..
புதுமை நிந்தன் பிரவேசமா..
பெண்ணுரிமை உன் வாசமா..
மண்ணுரிமை நம் நேசமா...
விளக்கேற்ற வந்தவள்
விரகெனவே கருகினாள்
கனவுகளை கழிவெனவே
கழுவி களைகிறாள்
அறுசுவை சோராக்கி
அன்பினால் தருகிறாள்
விருந்தனவே தான் மாறி அருந்திடவே விடுகிறாள்
உறவுகளை காத்திடவே உணர்வினையே பொழிகிறாள்
உள்ளுக்குள் தான் உடைந்து
தியாக தீபச்சுடர் ஆகிறாள்.....
பாரதியின் புதுமைப் பெண்ணோ பாருக்குள் ஒரு பக்கம்.. ஊருக்குள் மது கடையில் இன்றளவில் பெண் வர்க்கம்....
கை விளக்கேந்திய காரிகைகள் காண்கிறோம் இன்றளவில் சாலையிலே.. காமக்கழிவுக்கான கழிப்பறையாய் இருள் சூழும் வேளையிலே...
புரட்சிக் கவிஞனே நீர் புனைந்ததெல்லாம்.. புல்லுக்கு வார்த்த நீரா யானதோ...
எள்ளுக்கும் தர்ப்பைக்கும் இச் சமூகம் விலை போனதோ...
இன்றைக்கும் ரிதன்யாவும் நிகிதாவும் இருபுறத்தில்....
சிந்தனைவாதிகளான நாம் மறைவிடத்தில்...
கல்லறை சுவரிலும் என் கைவிரல்
எலும்புகள் கவி படைக்கும்
ரத்த நாளங்களை குழைத்தே மை எடுக்கும்.. உணர்வின் உண்மை ஒருநாள் நம் கனவு பலிக்கும்...
இவண்
ஆற்காடு குமரன்
9789814114