மனம் கலங்காதேன்னு சொல்லிவச்சா என் தாயி
மண்ணு தேய்ச்சு குளிக்கையிலே சரும நோயி ஏதும் இல்ல..
மண்ணோடு மண்ணா ஒண்ணா போகாதிருக்க வழியும் இல்லை
வண்டல் கரிசல் செம்மண் சரளை பாலை களிமண்ணே என் மூளை
கலை வடிவமே என் வேலை
ஆறு கொண்டு வந்து சேர்த்தது வண்டலானது.. நீர்வளம் மிகுந்ததால் வளம் தோன்றுது...
எரிமலை பாறை சிதைவுகள் யாவும் கரிசலானது.. நீரை உறிஞ்சி சேர்த்து வைக்க ஏதுவானது...
வறுமையின் நிறமோ சிவப்பு இரும்புத்தாது நிலைப்பு.. சிவந்த மேனியென் சிறப்பு செம்மண்ணே என் பிறப்பு....
உருளையாய் உருண்டுண்டானதோ சரளை களிமண்ணுடன் கலந்து இறுகிப்போனதோ திரளை
நீர்வளமின்றி நீர்த்துப்போனதோ
நிறமிழந்து வெளுத்து ஆனதோ
காற்றில் பறக்க சிறகு முளைத்ததோ
பாலை பறவை ஒன்றானதோ
மண்ணுக்கும் மனுசனுக்கும் உள்ள உறவு விட்டுப் போச்சு.. மரபணு கலப்பினால மகவு இல்லாமல் ஆச்சு
நகரமயமாக்கல் என கிராமங்களில் பேச்சு...மண்ணை மறைக்கின்ற
மாளிகைகள் வந்தாச்சு
தாறு பூசி புட்டோம்
நீரை தடுத்து புட்டோம்
சேரை இழந்து விட்டோம் சேராவிடம் சேர்ந்து தோத்து புட்டோம்....
காலடி பதிய கூட காணி நிலம் இல்லையடா
கல்லறைக்கிடமும் இல்லை எரி மேடை வந்ததடா...
மண்ணோடு மண்ணாக போக கூட முடியலடா
காற்றோடு சாம்பலாகி கரைந்து தீருங்கடா
கானகம் இல்லையடா கார் மழை பொழியல டா
இயற்கை சீறும் எரிமலையாகும் பாருங்கடா ...
மண்ணை காத்திடவே மரங்கள் நட்டிடுவோம்
விண்ணை தான் தொட்டு வான் மழையை கொணர்ந்திடுவோம்
என்னே தலைப்பு "மண்"
அதன் கண் இப் "பண்"
இந்நொடி தங்கள் முன்
நன்றி வணக்கம்
இவன்
ஆற்காடு குமரன்
9789814114