எளிமையானவன் இனிமையானவன்.. எண்ணங்களில் வலிமையானவன்...
செயல்களில் பொறுமையானவன்.. சேவைகளால் பெருமையுடையவன்...
பாரதி கண்ணனா இவன் பாரதிக்கு அண்ணனா.... கண்ணனின் அழகு
பாரதியின் கனிவு...
சமூக கண்ணோட்டம்
சமநிலை அவன் ஊட்டம்..
மெல்லிய தேகம்
மென்மையான இதயம் மேன்மையான உதயம்....
எங்களின் விதை எழுச்சி கவிதை
இகழ்ச்சியற்ற புகழ்ச்சி நிலை
பாசவலை பாயும் அலையாய் ஓயாமல்.. பண்பு என்றும் மாறாமல்..
பணிவு துணிவு கனிவு
ஒளியில் அவன் நிலவு... அறிவு மிகை தெளிவு..ஆற்றல் என்றும் பொலிவு
ஈன்ற பொழுதிற்ப் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய்..."நானே"...
மூடநம்பிக்கை என்றும் இல்லாதவன்
முடமாகி போகாதவன்..மூடனல்ல என் மகன்... மூலாதாரம் போன்றவன்...
பிறப்பித்ததால் தானே
பிடிப்பு எனக்கடா... நீ சிறப்பித்ததால் தானடா சிகரம் நானடா....
நீ பிறந்த நாள் மட்டும் சிறந்த நாள் அல்ல.. பின் வந்த எல்லா நாட்களும் சிறந்த நாட்களே...
உன்னில் என்னைக் கண்ட உகந்த நாட்களே... உனக்கென வடித்தேனடா
இந்த பாக்களே...
இவண்
ஆற்காடு குமரன்
9789814114