மதிய உணவு என்னவென்றேன்
எல்லோரும் சலித்துக் கொள்கிறார்கள் ஏன் என்று தெரியவில்லை அறுசுவை தேடி அலையும் நாக்கு...
அடுத்தவன் கதை பேச அலையும் நாக்கு... அடுத்துள்ளவனையும் கெடுத்து விடும்
கௌரவம் பார்க்கும் சிலர்
பசி உணர்வை தீர்க்கும் உணவில் எதற்கடா கௌரவம்....
எப்படி இருக்கிறாய் என்று நலம் விசாரித்தால் ஏதோ இருக்கிறேன் என்ற சலிப்பு....
எதிர் வருபவனையும் நிலை குலைத்து விடும்.. எதிர்மறையான எண்ணங்கள்...
சொல்லிக் கொள்ளும்படி ஏதுமில்லை என்கிறார்கள்.....
சொல்லிக் கொள்வதற்கென்று ஏதாவது தனியாக இருக்கிறதா என்ன....
ஒரு காலத்தில் சிற்றுண்டி என்பது பண்டிகை காலங்களில் மட்டும்
இன்று சிற்றுண்டியில் உண்டி நிரப்பும் பலர்
எதை சிறப்பு என்று நினைக்கிறது இந்த மானுடம் தன் பிறப்பையே சிறப்பென நினைப்பதில்லையே
தன் இருப்பென்ன என்ற நினைவே இருப்பதில்லையே...
அன்பின் அருமை உணர்ந்தவன் அன்பினை அவமதிப்பதில்லை
பண்பின் அருமை உணர்ந்தவன்
பாதை மாறுவதில்லை
பசியின் அருமை உணர்ந்தவன்
ருசியை மதிப்பதில்லை....
ருசியாய் உண்ணும் நேரம் ரசிக்க மறப்பதில்லை....
பசியையும் ருசியையும் வென்றவன் என்றும் நசிவதில்லை... அறுசுவை தேடி அலையாதவன் ஆரோக்கியம் இழப்பதில்லை....
இன்றளவில் பலர் உதிர்க்கும் சொற்கள் யாவும் சலிப்பாகவே தெரிகிறது...
செவி கொடுக்கும் நமக்கும் தொற்றி விடுமோ என்ற பயம் இருக்கிறது...
மாற்றிப் பாருங்கள் உங்கள் சொற்றொடர்களை....
ஆறுதல் என்னும் ஆதாயம் தேடி தன் ஆதாரத்தை இழக்கிறது... சேதாரம் ஆகிறது செயலிழந்து போகிறது...
இனியாவது மாற்றி சிந்திப்போம்
ஒவ்வொரு உணவு இடைவேளையின் போதும் என்னை மீறி உதிக்கும் வார்த்தைகள்.....
ஆண்டவா இந்த வேளைக்கு எதையாவது கிடைத்தது அடுத்த வேலை எப்படியோ....
நம்பிக்கை இல்லாமல் என் நாவு இதனை உச்சரிக்கவில்லை...
நன்றி கடனாக நினைத்து உச்சரிக்கிறது...
ஏன் எதற்கு எப்படி என்று தெரியாது
ஆயினும் இதுதான் எதார்த்தம் என்பது மட்டும் பெரும் உண்மை...
ஆண்டவா என்று உச்சரித்தவுடன் எந்த மதத்தையும் எந்த கடவுளையும் நினைத்து விடாதே...
அண்டம் யாவையும் ஆண்டு கொண்டிருக்கும் இயற்கையை சொல்கிறேன்...
பிண்டம் ஆக்கப் போகும் என் உயிரின் உணர்வை நினைக்கிறேன்....
உரையாடலை கொஞ்சம் மாற்றிப் பாருங்கள்... நீங்கள் உச்சரிக்கும் ஒவ்வொன்றும் பிறரை எச்சரிக்கும்
நேர்மறையாக சிந்தித்துப் பாருங்கள் ஒளியும் மறைவு இனியெதற்கு
உனக்குள்ளதே எனக்கும் நமக்குள்ளதே பிறர்க்கும்...
கௌரவம் என்பது வேறொன்றுமில்லை நம்மை கவிழ்க்க வந்த புறம்... கர்வம் என்பது
நிறம்... கலைந்திட கூடும் நிரந்தரம்
இவண்
ஆற்காடு குமரன்
9789814114