வாடிக்கையாளரை எதிர்கொள்ள இயலாமல் தலை கவிழ்ந்து கிடப்பது தன்னடக்கம் என்பதா.....
பணிச்சுமை என்று காலம் கடத்துதல் கடமையினில் ஒரு கயமையா...
காரணம் சொல்வதைத் தவிர்த்து விட்டால் காலம் கடத்துதல் நேராது....
வெட்டு ஒன்னு துண்டு என்றால் உறவு விட்டுத் தொலையும் அண்டாது.....
இல்லை என்று சொல்லிவிட்டால் ஏன் என்று கேள்வி வரும் தொல்லை என்று தான் தவிர்த்தால்..எல்லை மீறி மேலிடம் போகும்....
யாரிடம் நான் சொல்லியழ என் யாக்கையின் சோம்பேறி தனத்தை.....
இப்போக்கின் உண்மையை
மழையை காரணம் காட்டும் உடல் நிலையை காரணம் காட்டும்
வினா தொடுக்கும் போதெல்லாம்
விடையாய் காரணம் வந்து சேரும்.....
தடையாய் இருப்பது பெண்ணினமே
தலைக்கனம் கொண்டது
உன்னினமே..
பெற்ற பிள்ளை அழைத்ததால் தெரியவில்லை மற்ற பிள்ளைகள் அழைத்தன அம்மா என்று....
ஆளுமைக்கு நிகரே இல்லை ஆயினும் வளமைக்கு ஆசைப்பட்டு போன நிலைமை புரியாமல் போனது
தலைக்கனம் எக்கணமும் நிலைக்காது....ஒரு கணம் சிந்தித்திருந்தால் இந்நிலை நிகழ்ந்திருக்காது...
காலத்தோடு கடமையை செய்யுங்கள் ஞாலம் உங்களை போற்றும்... கர்வத்தை கொஞ்சம் விட்டு விடுங்கள் சர்வமும் ஒரு நாள் முடங்கி போகும்
சில பெண் ஆளுமையின் கீழ் பின் விளைவுகள் இவை.. முன்னிறுத்துகிறேன் முறையா..? இத்தகை...
இவண்
ஆற்காடு குமரன்
9789814114