நம்மை இந்த சமூகம் எப்படி காண்பது என்பதை நாம் உணர்ந்து விட்டால் போதும் நாம் சொல்லிலும் செயலிலும் பண்பு தானாய் வந்துவிடும்.....
எதற்கெடுத்தாலும் நாம் சமூகத்தை சாடுகிறோம் சமூகம் நாம் என்பதை மறந்து
வங்கியின் பக்கம் சென்று இருந்தேன்... சேவை துவங்கும் முன்னே என்னை தேடி வந்த அதிகாரி.....
என் தேவை என்னவென்று
அறிமுகப்படுத்திக் கொண்டார் தன்னை....
தேநீர் கடையில் சந்தித்ததாக சத்தியமாய் நினைவில்லை
எழுதுவதைத் தவிர எனக்கு என்ன தெரியும்
என்னையே நான் மறந்திருக்கும் நிலையில் எதிரில் இருப்பவர் எவரென எனக்கு புரியும்
வந்த காரணம் அறிந்ததும் தானாய் வந்து விழுந்தது முன்னுரிமை....
சந்தை கடை என்று நான் விமர்சித்த இந்த அரசு வங்கியா என் பந்தக்கடையாகி போனது
சில நொடிகளில் வேலை முடிந்தது
விடைபெற்று படிகளின் வழியே இறங்கினேன்...
அதே படிகள் பல மடங்கு ஏறி போனது என்னைப் பற்றிய பிறர் கணிப்பு என்னவென்று...
கற்றுத் தெளிந்தது வேறொன்றுமில்லை... இந்நிலையில் நிலைக்க வேண்டும் என்பதே....
நம் சொல்லும் செயலும் சரியானால் உள்ளும் புறமும் ஒன்றாகும்
சமூகம் சார்ந்து பயணிப்பதால்
சமூகமும் எனக்கு சாதகமாகவே...
சமூகம் மேம்பட சிந்தனை செய்யுங்கள்...
நம் சந்ததிகளும் மேம்படும்....
நான் என்ன செய்து விட்டேன் நான் யார்... என் மீது கொள்ளும் கரிசனத்திற்கு காரணம் என்ன
தரிசனம் தரும் உங்கள் உள் உணர்வை நான் உருவாக்கம் தருவதாலா....
பரிசு என மிளிரும் இன்முகம்... என் உள் முகம் தானா
பகட்டு இல்லாத யதார்த்தத்தை
உணர்த்தும் வரிகள் தானா....
யாதென யானறியேன்
யாக்கை சேரும் வரை என் போக்கில் நான் இப்படியே....
இவண்
ஆற்காடு குமரன்
9789814114