குறளின் அதிகாரத்தை எடுத்துக் கொள்ளச் சொல்கிறார்கள்
எந்த உரிமையில் நான் ஆதிக்கம் செலுத்த முடியும் அதிகாரம் செய்ய முடியும்.....
உலகப் பொதுமறை அல்லவா எனக்கு மட்டும் எப்படி முறையாகும்....
நால்வரோடு போதும் ஆம்
இறுதியில் நானும் நால்வரோடே போவேன்.உறுதியே...
இப்படித்தான் நிறைவாக உரிமை கொண்டாடி அது மிகையாக தள்ளிவிடும் வேளையில் எள்ளி நகைக்க கூடும் பிறர் விரைவாக....
எளிமையாக துவங்கி வலிமையாக ஊன்றி வளமையாக துளிர்விடும் நேரம்... மென்மையாக வருடி ரசித்து
வேரோடு கிள்ளி எறிந்து...?
வேருடன் பிடுங்கி எறிந்த பின் வேரடி மண்ணை வருடி என்ன பயன்....
வாய்க்கரிசி போட்டு விட்டு
வாய்விட்டு அழுது என்ன பயன்...
தன்னலம் கருதும் உன் நலம்
கருதும் ஓர் உள்ளம் உள்ளவரை
உன் நலம் என்றும் குலைவதில்லை
உள்ளுணர்வின் தூண்டுதல் தான் உரிமைக்கான காரணம்.. ஊற்றெனப் உண்டாகும்..
தூற்றிட ஊமையாகும்
மாற்றிட இயலாமல் மனசுக்குள் உரையாடும்....
உள்வாங்குதலும் வெளிவிடுதலும் எளிதல்ல.., இறுதி நொடியில் மூச்சுத் திணறனில் போது உணர்வேன் நான்...
ஆயினும் உரை எழுதுகிறேன் உள்ள நிறைவோடே.... என் மொழியின் அடையாளம் அல்லவா. அடைவதென் இலக்கு அல்லவா....
தொடர்கிறேன் பயணத்தை தொலைந்து போன என்னை தேடி....
இழைகிறேன் குறளோடு... இனியெத் திசையிலும் என் குரலோடே...
இவண்
ஆற்காடு குமரன்
9789814114