வலம் வருவது அத்தனையும் வணிக நோக்கமாக இருக்கிறது.... முகநூலில் கூட முழு நேர வணிகம்...
ஆதாயம் இல்லாமல் எவனும் இங்கு அறிமுகமாவது கூட இல்லை... ஆசை ஆதாரம் கேட்பதில்லை...
எதையாவது சொல்லி ஏதாவது ஒன்றை எவன் தலையிலாவது கட்டி விட வேண்டும் அதன் மூலம் பொருளை ஈட்டி விட வேண்டும்...
எவன் எப்படி போனால் என்ன..? இவன் செழித்தால் போதும் என்ற சுயநலம்...
கற்களை விற்கிறான் ரசமணி எண்கிறான்.. கருங்காலி மாலை என்கிறான்.. பில்லி சூனியம் மந்திரம் கூட.. அலைக்கற்றை வழியே அன்றாடம்....
பிறருக்கு கொடுத்து வாழ விட்டாலும் பரவாயில்லை பிறரை கெடுத்து வாழ்கிறது இந்த சமூகம்..,
பிறப்பின் பயனே பித்தலாட்டமாய் ஆகிவிட்டது... ஆதாயம் இல்லாமல் ஆலோசனை கூட சொல்வதில்லை எவனும் இங்கு....
அங்கீகரிப்புக்கு கூட ஆயிரம் கட்டணங்களின் அட்டவணை இங்கு
விருதுகளின் விலைப்பட்டியல்..
பெயர் பொறித்து தர..
பொருளைத் தேடி அலையும் இந்த சமூகம் என்று பொருள் உணர்ந்து வாழ போகிறது ...
பொழுதுபோக்கில் கூட பொருளை ஈட்ட நினைக்கும் இந்த சமூகம் எப்படி பொறுப்பான சந்ததியை உருவாக்கும்
என்ன சாதிக்கிறார்கள் அல்ல எவ்வளவு சம்பாதிக்கிறார்கள் பிறருக்கு சதி செய்து......
சித்தர்களின் பெயரைச் சொல்லி
சிறு வணிகம் போல் பெரும் முதலாளிகள்... முகநூலில்....
ஏற்றும் விளக்கில் பலவகை ஊற்றும் எண்ணெய் பல வகை போடும் திரியிலும் பல வகை... ஆனால் எரியும் தீயோ ஒரு வகை....
நல்லது நடக்கும் என்று எவனாவது சொல்லிவிட்டால் போதும் உள்ளது என்னவென்று உணர கூட தோன்றாது அல்லது இதுவென்று அறிவும் கூட வாராது...
எல்லாமே இங்கு ஏமாற்று வேலை... நம்மை மாற்றும் லீலை... மழுங்கிப் போகும் மூளை...
மனையடி சாத்திரம்.... இருப்பது நான்கு திசை ஒவ்வொரு திசை இணையும் இடத்தை வைத்து எட்டு திசை ஆக்கினான் மனிதன்...
நான்கு மூலைக்கு ஒவ்வொரு பெயரை வைத்தான்.. மூளை சலவை செய்ய.... உன்னை மூடனாக்குவதன் மூலம் அவன் முதலாளியாக...
இதை வாங்கி வைத்தால் நல்லது நடக்கும்.... இதை பகிர்ந்தால் நல்லது
நடக்கும்... இங்கு சென்றால் நல்லது நடக்கும்... ஒன்று வியாபாரம் இன்னொன்று விளம்பரம்....
உனக்கு நல்லது நினைக்க உன்னைத் தவிர வேறு யாருமில்லை... உறவுகள் நினைத்தாலும் உள்நோக்கம் இருக்கிறது....
உன்னை நீ நம்பு உன் உழைப்பை நீ நம்பு.. உனக்கு நீ உண்மையாய் இரு
உயர்வு நிச்சயம்.. உள் உணர்வு சத்தியம்...
இவண்
ஆற்காடு குமரன்
9789814114