இரவில் இமைகளும் எழுதிக் கொண்டிருக்கின்றன இதயத்தில் கனவில் கண்டதை காதலோடு.....
உன் விழிகள் பேசிய மொழியையே இமைகள் மூடி ரசிக்கிறது இதயம்...
ஒலியற்ற உன் மொழி உளியாக செதுக்கியது என் இதயத்தை அழகாக உன்னை போலவே....
வேண்டாத எல்லாவற்றையும் விட்டுவிட்டு நீ வேண்டும் என்று உன்னை சுமக்கிறது
அழகாகவே திரிகிறேன் நான் அகத்தில் நீ இருப்பதால்.....
அகந்தையுடன் திரிகிறேன் நான் அகத்தில் நீ இருப்பதால்....
இல்லை என்று நாம் இருவரும் மறுத்தாலும் இல்லாமல் இல்லை இதயத்திற்குள் நம் நினைவுகள்....
நீயும் நானும் ஒரே நிலையில் மறுப்பதும் மறைப்பதுமாக....
கால நேரம் விதிவிலக்கு அல்ல கல்லறை சேரும் வரை இருக்கும் இந்த நடிப்பு காதலை மறைத்தபடி.... காலத்திற்கும் காதல் நினைவுகளில் உறைந்தபடி....
இவண்
ஆற்காடு குமரன்
9789814114