முழு நேர எழுத்தாளர் அல்ல நான் எனக்குள் எண்ணம் எழும் நேரம் எழுத்தாளர் நான்.....
கருத்தூன்றினால் போதும் குருத்தோன்றிட கூடும்
எழுத்துருவாகிடும்..வாசிக்க
எழுந்தவெண்ணமாகும்
காவல் நிலைய எழுத்தாளர் கூட தன் எண்ணம் போல் எழுத முடிவதில்லை பிறர் சொல்லும்படி எழுத வேண்டும்.. அவர் பணி எழுத்தர் பணி....
பத்திர எழுத்தாளன் பத்திரமாக எழுதுகிறார் பார்த்து பார்த்து
அடித்தல் திருத்தக் கூடாது பத்திரம் என்று.....
பத்திரிகை எழுத்தாளர் பிறர் பதறிட எழுதுகிறார்... விற்பனை இலக்குக்காக வில்லங்கமாக விதைக்கின்றார்....
திரைப்பட பாடல் எழுத்தாளர்.. பொருளுன்றி எழுதாமல் பொருளுக்காக எழுதுகிறார்.....
எண்ணம் எழும் நேரம் எதுவென்று தெரியவில்லை மற்ற நேரம் பார்வையாளன்... விழிகளால் வாசிப்பதை மொழிகளால் எழுதுகிறேன்...
எண்ணமற்று ஏதுமில்லை .... எதார்த்தமான எழுத்தாளன்
என் எழுதுகோல் உதிர்க்கும் எழுத்துக்கள் மற்றவர்க்கு
அமைய வேண்டும்... எழுந்து நிற்க வைக்க வேண்டும்.....
துளிர்க்கும் எண்ணங்களால் துளிர்த்து எழ வேண்டும்....
நீரி...ன்றி அமையாது உலகு நிச்சயம் நீ உணர வேண்டும்...
துளிர்க்கும் எழுத்துக்கள் பிறருக்கு துணிவை தர வேண்டும்..
எழுதும் எழுத்துக்களால் பிறர் எழுச்சி பெற வேண்டும்....
ஊன்றி எழுதும் எதுவும் ஊன்று கோலாக அமைய வேண்டும்
சான்றுகளாய் நிலைத்து சந்ததி சிறக்க வேண்டும்...
முழு நேர எழுத்தாளர் அல்ல நான் முழுவதும் எழுதாமல் ஓய்வதில்லை
மூச்சு உள்ளவரை அல்ல முத்தமிழ் எல்லை வரை.....
விளை வற்ற வினை வீணே...
வீணான வினை என் எழுத்தில் காணேன்....
இவண்
ஆற்காடு குமரன்
9789814114