செத்துப் போனாலும் செல்வி புதுமைப் பெண்...
பக்தி பரவசத்தில் அன்னபூரணி பதுமைப்பெண்
உற்றத் தோழி குற்றவாளி
புதுமைப்பெண்
பட்டதாரி பாவை நிர்மலா தேவி
புதுமைப்பெண்
சிவ ஜோதி சிற்றின்ப பாவை சிணுங்கும் பெண்
கள்ளுக்கடை வரிசையில் கல்லூரி பெண்கள்...
உல்லாச விடுதியில் உணவு பண்டம்
உடல் பிண்டம் ...
ஆணுக்கு பெண் நிகரே புகைப்பதிலும் குடிப்பதிலும்...
ஆணுக்கு பெண் நிகரே சம்பாதிப்பதிலும் சகலத்திலும்
ஆணுக்கு பெண் நிகரே சல்லாபத்திலும்
சரீர தாபத்திலும்
ஆணுக்கு பெண் நிகரே
தர்க்கத்திலும் கர்வத்திலும்
ஆணுக்கு பெண் நிகரே மறுமணத்திலும் மனமாற்றத்திலும்
பாரதி காணத் துடித்த புதுமைப்பெண் (பாரில்) ...பாரீர்....
இவண்
ஆற்காடு குமரன்
9789814114