Type Here to Get Search Results !

புதுமை பெண்

 பாரதி கண்ட புதுமை பெண்ணா...?

கள்ளு குடிக்குது ஆணோட ஒன்னா...

நாளுக்கு நாளு மின்னுது பொன்னா ..

ஆடையாய் ஆளை மாற்றுது கண்ணா


ரவிக்கையில் சன்னல் திறக்கும்..

ரசிக்கையில் மின்னல் தெறிக்கும்....

ரசாயன அமிலம் சுரக்கும் 

ரத்தின சுருக்கம் ஒத்திகை பழகும் 


நட்ட நடு நிசியிலே 

நங்கையவள் பசியிலே..

கட்டவிழும் வனப்பிலே 

கெட்டழியும் நிலையிலே..


சாலையோர சோலையாய் 

இளைப்பாறும் வேளையாய் 

நிலவுக்கு போட்டியாய் 

நின்றிருப்பாள் வை ப்பாட்டியாய்


நாணயத்திற்காக நாணயம் இழப்பாள்... நா நயத்தோடே நங்கூரம் இடுவாள்... மெல்லினம் இழந்து வல்லினம் ஆவாள்... இடையினம் கண்டு அடவிட துடிப்பாள்..


ஆணும் பெண்ணும் சரிசமம் ஆணவத்திலே நூறு சதம் 

தேவை இல்ல கரிசனம் 

திணவின் திறவு தரிசனம் 


பாவக் கணக்கா

பருவம் பிணக்கா

உணர்ச்சி பிழம்பா 

புணர்ச்சி பிழைப்பா..?


அவயம் அவளுக்கு ஆதாரம் 

அபயம் ஆனவன் சேதாரம் 

அபாயகரமாகும் வாழ்வாதாரம் 

அவல நிலை பொருளாதாரம் ...


காணத் துடித்த புதுமைப்பெண் கைம்பெண் எனில் சமூகம் பிழை

காசுக்காக அவள் நின்றாள் கையாலாகாத கணவன் நிலை


காமத்துக்காக அவள் சென்றாள்

கையாளத் தெரியாத காளை குறை 

கர்வத்தில் காத்துக் கிடந்தாள்

வாதையே இறுதி நிலை...


தனிமனித ஒழுக்கம் இருந்தால் 

தலைகுனிவு என்றும் இல்லை 

பாலினம் என்பது பிழையும் இல்லை 

பாலுணர்வின்றி பிரபஞ்சம் இல்லை.


விபச்சாரியை விளைவிப்பவன் ஆணே... விரசத்தை விதைப்பவனும் ஆணே... கற்பென்பது இருவர்க்கும் பொதுவே.. கற்றுணர்ந்தால் இல்லை களவே....


இவண் 

ஆற்காடு குமரன் 

9789814114

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.