என்னைப்போல் ஏழு பேர்
பரவாயில்லை...
ஊரார் பார்வையில் ஏமாளியாக உன் பார்வையில் கோமாளியாக...
ஈரேழு உலகையும் ஏமாற்றி திரிய
நீ ஒருத்தி போதாதா ... உன்னை போல் ஏழு பேரா..? இயங்குமா பிரபஞ்சம் சீரா...
பாலினம் மாறாமல் இருந்தால் பாவம் ஆணினம் பலியாக்கும் மானினம்
ஐவிரலும் ஒன்று போல் இல்லையே ஆயினும் ஐயம் எனக்குள் ....
ஏழு பேரில் ஒருவர் இறந்தாலும்
இன்னொருவர் பிறப்பாரா...?
ஏமாற்றத்தில் துடிப்பாரா...?
கோபம் குரோதம் வஞ்சம் துரோகம்
குரூரம் அத்தனையும் உள்ளடங்கிய ஒத்த உருவம் போதாதா...?
மீதமுள்ள ஆறு பேரை கண்டு வர முயல்கிறேன்... என்னை கொண்டு போகும் முன்னே...
இவண்
ஆற்காடு குமரன்
9789814114