காட்சிகள் யாவும் பதிய மறுக்கின்றன சாட்சியாய் உன் முகம்....
மாற்றுப் பதிவும் ஏதும் இல்லை
மறு பதிவும் தேவையில்லை
உன் வதனப்பதிவு மனப்பதிவானது மரணமின்றி பதிந்து வாழுது..
இன்று வரை மாற்றமில்லை
அன்று பதிந்த உன் முகம் தின்று தீர்க்கிறது என் அகம்....
பருவங்கள் கடந்தால் என்ன உருவங்கள் சிதைந்தால் என்ன
உருக்குலையாமல் உன் முகம்
மொழி பெயர்க்க இயலாதது
உன் பெயர் மட்டுமே..உயிர்த்தெழச் செய்யும் உணர்வினைக் கொண்டதும் உன் பெயரே....
யாரோ உச்சரிக்கிறார்கள்..என் மனம் என்னை எச்சரிக்கிறது..திரும்பிப் பார்க்கச் சொல்லி நச்சரிக்கிறது
பெயரிலும் மாற்றமில்லை
உயிரிலும் மாற்றமில்லை
உணர்விலும் மாற்றமில்லை
என்னில் ஏமாற்றம் இல்லை
இமைகளை மூடினாலும்
இருட்டை உணரவில்லை
ஒளியாய் உன் முகம்...
இன்னுயிர் பிரிகையில் இமைகளை திறந்து வைக்கிறேன்... பிரிந்து செல்லட்டும் பதிந்த உன் முகம் என்று
இறந்து விட்டேன் என்று இமைகளை மூடு கையில் மறந்து விட்டார்கள்
இமைக்குள் நிலைக்கும் உன் முகம்...
காணும் யாவிலும் காட்சி படுகிறாய்.. ஒலியின் வழியே வாட்டி வதைக்கிறாய்..
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் அடக்கத்தின் போதும் அழகாகவே நான்... அகத்தில் நீ... முகத்தில் காண்
இவண்
ஆற்காடு குமரன்
9789814114