உனக்கும் எனக்குமான இடைவெளி நீண்டு கொண்டே போகிறது
முற் பாதியின் நிகழ்வுகள் யாவும் பிற்பாதியில் நினைவுகளாக...
இடையில் கனவில்
இரவுப் பொழுதுகள்
இமைக்க மறந்த விழிகளின்
இனப்பெருக்கம் கண்ணீர்..
திவளைகளாக விழுகிறது
மழலைகளாக தவழ்கிறது
பசலைப் பிணியில் மடிகிறது
காற்றில் கரைந்து மறைகிறது
நமக்கு பிடித்த யாவும் நடக்கும் நாளை என்றாய்... இடையில் துடிக்கும் காதலை ஏனோ நீயும் மறந்தாய்
பா வடிக்கும் வேளையிலே... விழி நீர் சுரக்கும் துளிகளையே... மெய்யெழுத்தாக புள்ளி
வைக்கின்றேன்..
உனக்கும் எனக்கும் இடையில் எத்தனை கனவுகள் கானலானது
இணையும் நினைவுகள் கோணலானது... நினைத்துப் பார்க்க நாணம் தோன்றுது ..
எழுத்துகளாவது இணைந்து வார்த்தைகளாக வாழ்ந்து விட்டு போகட்டுமே ....
ஒவ்வொரு அடிகளின் முடிவிலும் தொடர் புள்ளி வைக்கிறேன்.. நினைவுகள் தொடர்ந்து வாழட்டுமே
பாதங்கள் வைத்த புள்ளியில் பயணங்கள் தொடர்கின்றன...
இறுதி புள்ளி க்கு பின்னும்
நினைவு வெள்ளி முளைககிறது ...
நீல வானில் மிளிர்கிறது
நீயும் நானும் நிலைத்திடவே....
இவண்
ஆற்காடு குமரன்
9789814114