அன்பை விதைத்ததால் அறுவடை செய்கிறேன் கண்ணீரை.........
உப்பும் ஒரு விளைச்சல்
உணர்வுகளின் சாட்சி
வெற்றிடத்தை நிரப்புகிறது கண்ணீர்..
இதயக்கடலில்
இடிமுழக்கம்
இருந்த நீர்
இருவிழியலையாய்
இதழைச்சேர்ந்து
இனியவள் பிரிவை இயம்பியது........
உப்பிட்டவரை உள்ளளவும் நினை
உப்பிட்ட உன்னை உயிருள்ளவரை உணர்கிறேன்
உகுக்கும் கண்ணீர்.....
அமுதம் நீ சுரந்து கொண்டிருப்பதால் அமுதசுரபியாக
என் இதயம்......
சேருமிடம் கொண்டே நீரின் நிறம் மாறும்
உன்னை சார்ந்த
என் கண்ணீர் பொன்னாய் மின்னியது........
நீ இருக்கும் வரை
ஈரமிருக்கும் இதயத்தோடு
இருக்கிறேன் நான்.....
நினைவுகள் மட்டும் செழிப்பாக என்றென்றும்.......வாடாமல்.....
இவண்
ஆற்காடு.க.குமரன்
9789814114