நான் அப்படி அல்ல என்று நீ எப்படி சொல்வாய்.. எப்படி என்று உன் வீட்டு கண்ணாடியை கேட்டுப்பார்....
கண்ணாடியும் கண் சிமிட்டும்
உன்னைக் கண்டதுமே தன்னை
மறந்து உன்னை காட்டும் .......
உன் நவரசம் கண்டு பாதரசம் உருகும்
உன் நளினத்தை கண்டு சலனத்தில் உழலும்.....
பார்க்க பார்க்க பிடித்துப் போகும் பாராத போது தனிமையில் வெறுமை படிந்தே போகும்.....
நீ சிரித்தால் அதுவும் சிரிக்கும் நீ அழுதால் அதுவும் அழும்....
கண்ணாடி முன் நின்று நீ கண்ணீர் விடுவதில்லை காயப்படும் என்று...
வனப்பினின் அணைப்பினில் வதைபடும் அதுவும்.. சந்திக்காத நாளில்லை நிந்திக்க ஏதுமில்லை....
உன்னைத் தவிர வேறு யாருமில்லை
சந்தேகம் இருந்தால் முன் நின்று கேட்டுப்பார்... இதயம் பிளந்து நீ இருப்பதை காட்டும்....
கல் எறிந்தாலும் கண்ணாடி கவலைப்படுவதில்லை சில்லுச்சில்லாய் உடைந்தாலும் சித்திரமாய் உன் வதனம்.....
துகள்களை எடுத்து எறிய துணியாதே... விரல்கள் காயப்பட கூடும்.. துகள்களை துயரில் ஆழ்த்தும்....
காதலுடன் நானும்... கண்முன்னே காணும் நீயும்...
இவண்
ஆற்காடு குமரன்
9789814114