முற்போக்குவாதிகள் கூட தன் முன்னில் இருப்பவனை புறம்போக்கு என நினைப்பது ஏன்...
பிறருக்கெனும் போதும் முற்போக்கு தனக்கு எனும் போது பிற்போக்கு....
நிலை மாறும் இவனே புறம்போக்கு
சாதி மயிர் நான் சவமான பின்பு தான் உதிர்கிறது சந்ததிகள் அறியாமல்
சாதி மயிரோடு திரிகிறது....
சவரக்கடையில் சேர்த்து வைத்த மயிர்கள் வந்து சாட்சி சொல்லுமா நான் இந்த சாதி என்று...
எந்த சாதி ரத்தம் பெரும் பான்மை இங்கு.... சாகும் நேரம் மட்டும் உன் மனப்பான்மை எங்கு...
சன்னதி தீண்டாமை.. விடக் கொடியது சாதிய தீண்டாமை.. நாதியற்று கிடைக்கையில் புரியும் சாதிய பெருமை வீண் என்று...
சாதி பெருமை பேசி பேசி வியாதி இன்னும் தீரல சாதி சகதி கழிவினாலே ... சந்ததிகள் இன்னும் மாறல
எவனவன் முற்போக்குவாதி
பிற்போக்குவாதி ஆன்மீகவாதி அரசியல்வாதி.. யாவும் சமூகத்தை சீர்குலைக்க வந்த வியாதிகள்...
தன்னை தற்காத்துக் கொள்ள நிறம் மாறும் பச்சோந்திகள் கூட பரவாயில்லை
இவன் தன்னை தற்காத்துக் கொள்ள
காலனையும் காவு கொடுக்கும் களவாணிகள்...
சாதி சாகும் வரை ஏதோ ஒரு சாதியில் பிறக்க வேண்டி இருக்கிறது
இறக்கும் வரை அதை சுமக்க வேண்டி இருக்கிறது...
இறப்புக்கு பின்னும் துறக்க வேண்டுமா இருக்கும் போதே துறந்திடுவோம்.. நாளைய தலைமுறை நலமாகும்....
இவ்வளவு எழுதும் நான் எந்த சாதி
சேர்ப்பது புரிகிறது வெளியில் சொல்லாவிட்டால் தாழ்ந்த சாதி என்பாய்... வெளிப்படையாகச் சொன்னால் நம் சாதி என்பாய்...
நான் உயிர்களின் சாதி... மனித சாதி என்றால் கூட இனம் பிரித்து பார்ப்பாயடா நீ...
நல்ல மனம் கொண்ட உயிர்களின் சாதி..நீயும் உணர்ந்தால் உண்டாகும் சமூகத்தில் சம நீதி...
உயர்ந்தவன் தாழ்ந்தவன் எவனும் இல்லை.... வானுக்கு கீழே வாழும் போது எல்லோரும் ஒன்றே... விழும் போதும் மண்ணுக்கு கீழே எல்லோரும் ஒன்றே....
இடையில் எதற்கடா பிரிவினை
இந்த சாதி மயிர் ஒரு தீவினை....
மயிர் என்று சொன்னால் சினம் கொள்ளாதே... மீசையை முறுக்கும்
நீ அறிவாயா... மீசையும் ஒரு மயிர் என்று...
உயிர் போகும் நேரத்தில் மயிரென போகும் சாதி... பேரிடர் வரும் நேரத்தில் பேதம் இல்லாமல் போகும் சாதி....
யாரிடம் வேண்டுமானாலும் கேட்டுப்பார் சாதி மயிரே தான்....
சாடும் நான் சாகுபடி பயிரே தான்...
இவண்
ஆற்காடு குமரன்
9789814114