1093...
நாண் நாண விதை
++++++++++++++++++
பார்த்திருக்கையில் பாராமுகம் பார்க்கும்..நொடியினில் நாணம் மிகும்..காதல் உகும்...
கன்ன வயலிலே கண்ணீர் துளிகள்
மின்ன வேர் பிடிக்கும் காதல் செடியே
அண்மையில் மிளிராத உண்மை வெட்கத்தில் பொலிவாய் பெண்மை
தங்கத்தில் இல்லாத நளினம் உன் அங்கத்தில் நாணம் மலரும் கணம்
பல்வேறு அணிகலன்கள் எதற்கு... பாவையுன் வெட்கம் போதுமே
தேவை தீர்க்க கூடுமே....
உன் வெட்கம் ஒன்றே என்னை வென்று விடும்.. வெறித்துப் பார்க்கும் என்னை தின்றுவிடும்...
விழிகளில் தோன்றிய வெட்கம்
கன்னக் குழிகளில் ஊன்றியதால்
இதழில் புன்னகைப் பூ..
வெட்கத்தில் விழிகளை மூடுகிறாய்.. விரலால் கோலம் இடுகிறாய்..
உந்தன் வெட்கம் விதையாகி
நம்மில் காதல் விருட்சமாக....
வெளிப்படையாய் கண்டாலும் அழகில்லை... வெற்றுடலை கண்டாலும் வேட்கை
இல்லை..
வெட்கம் ஒன்றே போதும் என்னை வேட்டையாடக் கூடும்.. நாணம் ஒன்றே போதும் இந்த வானம் வந்து வீழ...
இவண்
ஆற்காடு குமரன்
9789814114