அவ்வப்போது கொஞ்சம் திரும்பி பார்... அகால மரணம் அடைகிறது
என் இதயம்...
ஒரே அடியாக ஒதுங்கி நிற்காதே ஒவ்வொரு நொடியும் துடிக்கும் இதயம்...
உன்னைக் காணாது இமைகள் கூட துடிக்க கூடும் இதயத்திற்கு நிகராய் இயங்கக் கூடும்.....
அடிக்கடி கொஞ்சம் காட்சி கொடு என் கண்கள் இருப்பதை மறந்து போகிறேன்.....
அடிக்கடி உரையாடு.... என் செவிகள் இரண்டும் செத்துப் போகிறது...
நிறத்தளவில் மட்டுமல்ல நிசமாகவே உன் நிழலும் நானும் ஒன்றுதான் உன்னை பின் தொடர்வதில்...
நீ என்ன செய்து கொண்டிருப்பாய்
என்ற நினைப்பில் நான் என்ன செய்கிறேன் என்பதையே மறந்து விடுகிறேன்...
என்னை நானே கிள்ளி பார்கிறேன்... உன்னை பிரிந்து இருக்கும் ஏதோ ஒரு நொடியில் நான் இறந்து இருக்க கூடும் என்று...
நீ என்னை நினைக்கிறாயோ இல்லையோ.. உன்னை நினைக்காமல் நான் இல்லை....
உனக்கும் எனக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது இருந்தாலும் என்ன.... முயற்சி திருவினையாக்கும்
எப்படியும் நீ என்னை மறந்திருக்க வாய்ப்பில்லை மறந்து இருந்தால் நான் இறந்திருப்பேனே என்றோ...
இறுதியாய் ஒரே ஒரு ஆசை....
இனியவளே அவ்வப்போது கொஞ்சம் திரும்பி பார்.. என் ஆயுள் பொழுது நீளட்டும்....
ஆயுள் பொழுது அத்தனையிலும் உன் நினைவு ஆளட்டும்.. நீளும் பொழுதில் நீங்காது காதல் வாழட்டும்
இவண்
ஆற்காடு குமரன்
9789814114