1094
இதயம் மட்டும் தானே இடம் மாறிப்போனது இமைகள் எப்படி...
சாமரம் வீசும் இமைகள் சாதகமானது எப்படி.....என்னை வீழ்த்திய விழிகளை காக்கிறது எனக்கு எதிராக....
விழியம்பெய்திய பின் விரைந்து மறைகிறது... தாக்குதல் நடத்திய பின் தலைமறைவாகிறது...
தொட்டா சிணுங்கி இலையா என்ன பார்வை தொடும் நேரம் மூடும் இவை இலையா இமையா...
நம்மிரு விழி இடைத் தோன்றிய காதல் இளைப்பாறும் இமைகள் நான்கும் சாமரம் வீசும்..
மூடி மறைக்கிறோம் நமக்குள்ளே...
மூடிய விழிக்குள் கனவுகளை....
தேடியபடியே இதயத்திற்கு ள்...
விழி கதவுகள் அடைபடும் போது காதல் விதைகிறது... வீட்டுக் கதவுகள் அடைபடும்போது காதல் வதைகிறது
கரு விழிகளுக்குள் காதலை அடைப்போம்.... கற்பு நிலை பிழறாமல் காதலை வளர்ப்போம்....
நீயும் நானும் மாறி மாறி மூடி மூடி
இவண்
ஆற்காடு குமரன்
9789814114