பிரம்மன் பிடித்தவறிய அழகை காலன் கவர்ந்து கொண்டானோ
விசாரணைக்குப் பின் தெரியும் விதியா விதித்தவன் சதியா
புள்ளி வைத்து ஆரம்பிக்கப் படுவது கோலம்..... முற்றுப்புள்ளி வைத்து முடிக்கப்பட்டது வாழ்க்கையின் கோலம்
தொலைக்காட்சித் தொடரின் தொடர்புதான்..... பலரின் தொடரும் வினாக்கள்.....
முக்கிய செய்திகளில் ஒன்றாகி போனது உன் துயரச் செய்தி
வாழ வேண்டிய வயதில் வாழ்க்கை முடித்ததும் ஏனோ.....
உயிரை மாய்த்துக்கொள்ள உரிமை இருப்பதை போல அந்த உயிரை உருவாக்கிய பெற்றோர்களை நினைத்துப் பாருங்கள்........
ஒவ்வொரு உயிரும் இரு உயிரின் பிணைப்பு..... அவர்களுக்குள் நீங்காமல் இருப்பது உங்கள் நினைப்பு.... அவர்களின் கனவுகள் நீங்கள்......
மரணம் தான் தீர்வு என்றால்
மயானம் ஆகும் பிரபஞ்சம்
உயிரை மாய்த்துக்கொள்ளும் முன் ஒரு நொடி நினைத்துப் பாருங்கள் தனித்து இருந்து இந்த உயிரை உருவாக்க முடியுமா உங்களால்....
உருவாக்க முடியாது இந்த உயிரை
அழித்துக் கொள்ள என்ன உரிமை
உயிரின் மதிப்பை தெரியாதவர்களே
தற்கொலைக்கும் கொலையும் செய்வார்கள்......
தீர்வு இல்லாமல் எதுவுமே இல்லை
பிறப்பும் இறப்பும் தீர்மானிக்கப்பட்டது
இடையில் எதற்கு இந்த இழப்பு
உடலைவிட்டு உயிர் மூச்சு தானாக உதவிக்கு செல்ல வேண்டும் நீயாக
உதறக் கூடாது......
உடலை விட்டு உயிர் பிரியாமல் ஊசலாடிக் கொண்டிருக்கிறது எத்தனையோ சீவன்கள் இங்கே....
உயிரின் மதிப்பு தெரியாமல் உதறி விட்டாய்....... சகோதரியே உனக்காக எழுதப்பட்ட இந்த கவிதை
சாக துணியும் அத்தனை பேரும் சாதிக்க துணியட்டும் இனி
சோதிக்கும் சூதுக்கும் போதித்து வாழட்டும் இனி
வாதித்து தெளிந்து கவலை
வலை களைந்து தீரட்டும் பிணி
சோதனை கண்டு
வேதனை கொண்டாய்
போதனை ஏற்காது
நீயுனை இழந்தாய்.......
பேசி தீர்க்க வேண்டிய பிரச்சனைகள் நீயே தீர்ந்து போனதால் உன்னைப் பற்றி பேசித் தீர்த்துக் கொண்டிருக்கிறேன் இந்த நேரத்தில்.....
சகோதரிக்கு சமர்ப்பணம்
இவண
ஆற்காடு க குமரன்