உயிரை மாய்த்துக் கொள்ள விருப்பமில்லை எனக்கு எனக்குள் துடிப்பது உன் உயிர் என்பதால்........
நீ தானடி என்னை பிரிந்து விட்டாய் உன் நினைவுகள் என்றும் என்னை விட்டுப் பிரியாமல்
நீ மறந்து விட்ட துறந்து விட்ட
காதலை காலம் மறக்கவில்லை
வெட்டி விட்டு சென்ற உனக்கு
ஏதுமில்லை தீதுமில்லை
வலியும் வடுவும் எனக்கு மட்டுமே
நீ என்னை மறந்து விட்டாலும் துறந்து விட்டாலும் தொடர்கிறது உன் நினைவுகள்
இமைகளை மூடினால் தான் இருட்டு தெரியும் இது நியதி
எப்போதும் இருட்டாக தெரிகிறது
என்னுடன் நீயில்லை
இது காதலின் விதி
உன் நிழல் கருப்பாக இருக்க காரணம் தெரியுமா.....
உன்னால் இருட்டான நான்
உன்னை நிழலாக தொடர்வதால்
சந்தித்ததை சிந்தித்துப் பிந்திப் போகிறது என் நினைவுகள்
முந்தி செல்லும் என் பாதங்களும் முழுக்க தேடுகின்றன உன் பாதச் சுவடுகளை......
பாவம் அதற்கு எப்படி தெரியும் சோடி மாறிப் போனது என்று......
வழியில் தென்படும் பெயர்ப்பலகையில் உன் பெயர்
வாசிக்காமல் இருக்க முடியவில்லை
வாசித்த பிறகு வலிக்காமலும் இல்லை........
வடுக்கள் அத்தனையும் நெருடுகின்றன வருடும் போதெல்லாம் உன்னை இழந்ததை எண்ணி வாடுகின்றன..,.
நீயும் நானும் நடந்த பாதை
வாழ்ந்த இடங்கள்
சந்தித்த நாட்கள்
சந்தித்த நபர்கள்
இப்படி நம்மைச் சுற்றி எல்லாமே மாறிப் போய்விட்டன என்னை சுற்றிய உன் நினைவுகள் மட்டும் இன்றுவரை மாறாமல் என்னையும் மாற்றாமல்....
உதிர்த்த உன் வாய் மொழிகள் உன்னில் இருந்து உதிர்ந்து போனதால் நீ மறந்து போயிருப்பாய்
அது என் மதியில் வந்து உறைந்து நிற்பதால் மறக்கவில்லை நான்
இரண்டு மனம் வேண்டும் என்றார்கள் நினைப்பதற்கு ஒன்று மறப்பதற்கு ஒன்று என்று
இரண்டு அல்ல எத்தனை இதயம் இருந்தாலும் அத்தனையிலும் நீ மட்டும் தான்
மறப்பதற்கு என்று ஏதுமில்லை உன்னை மறப்பதும் நான் மரிப்பதும் சரி சமம்
இவண்
ஆற்காடு க குமரன்
9789814114