மூன்று நாட்கள் மட்டும்தான் முதன்மையாய் தெரிகிறது...
முப்பது நாட்களின் முனகல் முழுசாய் மறைகிறது....
தூரம் வருமுன்னே
பாரம் கூடிப் போகும்
நெஞ்சு வெடித்துப் போகும்.....
தஞ்சம் ஏதுமின்றி தணியாமல் தலைவலியும் கூடும்..மஞ்சம்
கூட முள்ளாய் குத்தும்....
கதறும் கண்கள் சிதறும் கண்ணீர்
நீராடு கையிலும் நிம்மதியில்லை ஊசியாய் குத்தும்...நீர்த்துளி
உதிரப்பாலும் உறைந்ததாத
சதிராடும் சண்டை போடும்
பாரம் கூடக்கூட படுத்துகிடக்க தோன்றும்.. ஆறும் வரை ஊறும்
பின் மாறும்
மல்லாந்து கிடக்கையில்
மூச்சுத் திணறும்
கவிழ்ந்து கிடந்தாலும்
காயம் இன்னும் கூடும்...
ஒருக்களித்து படுத்தால்
ஓரளவு பரவாயில்லை ... ஒருபக்கம் இதமாக
மறுபக்கம் மதமாக...
கழுகு பார்வை பார்க்கிறாயே
கழற்றி வீச முடியவில்லை
அறுத்து எறிகிறேன் ... அடங்கட்டும் உன் காம பசி
வட்டுடையில் வைத்தாலும் வதைகிறது..வலியில் நெளிந்து வெளியில் தெரிகிறது....
வலம் வரும் விழிகள் அதனை மொய்க்கிறது.. காண்கையிலென்
மெய் சிலிர்க்கிறது....
சோர்ந்து சோர்ந்து கிடக்கிறேன் சார்ந்து வாழ துடிக்கிறேன்..சாரம்
இன்றி துடிக்கிறேன்... சாய்ந்து கொள்ள தாய் மடியும் இல்லை தவிக்கிறேன்....
பெண்ணின் தேவை சேவை
என்றானதிங்கே....
பொழுதுபோக்குக்கு போகப்பொருளாக... கண்டு ரசிக்கும் காட்சிப்பொருளாக
களிப்புற தொய்வையாகவே.
மரப்பாச்சிப் பொம்மைக்கு இருக்கும் வலிமை கூட இன்றைய மங்கையர்க்கு இல்லை....
சமுதாயச் சிக்கலா சகித்துக் கொள்ள முடியாமல் வரும் விக்கலா....
கொட்டிவிட்டேன் அத்தனையும் எட்டி விட வாய்ப்பு உண்டு
தட்டி விட முடியாமல் கைகொட்டி மகிழாமல்...
உரிமை என்று கொண்டாடும் உடமை என்று கொண்டாடும்
அடிமை என்று கொண்டாடும்
ஆண்மகனே
எனக்கும் உயிர் என்று ஒன்று உண்டு அதற்குள்
உணர்வுகள் என்று ஒன்றும் உண்டு..
பரிதாபப் பார்வையும் வேண்டாம் பரிகாசம் பார்வையும் வேண்டாம்
அவசரத்திற்கு வேண்டாம் அவகாசம் கேட்கிறேன்...
எனக்குள் இருக்கும் தன்னம்பிக்கை உன் மீது கொண்ட நம்பிக்கையால்...
நாசமானது தான் மிச்சம்...
நீயே என் எச்சம்
நீதானே என் மிச்சம்....
இவண்
ஆற்காடு க குமரன்
9789814114