நமது பலவீனத்தின் மூலம்..
நமது பலத்தை இழக்கிறோம்
நம்மை அறியாமலே...
இருப்பது போதும் என்று எண்ணாதே நம் இருப்பு இழப்பதற்கு காரணம்....
எதையாவது எதிர்பார்த்து நமது பலத்தை கூட்டிக் கொள்ளலாம் என்று நினைக்கிறோம்
கொள்ளளவை மீறி எதையும் கொள்ள முடியாது... கொள்ள நினைக்கும் நம்மை கொன்றுவிடும்.....
இருக்கும் பலம் போதும் என்று நினைத்தால் சிறக்கும் பலம்...
மேலும் மேலும் வேண்டும் என்று நினைப்பதால் தான் நாளும் துன்பம் இங்கே...
பலம் கூட வேண்டுமென்று நீ தேடுபவர்கள் உன்னால் பலன் காண வேண்டுமென்று இணைகிறார்கள்.....
உண்மையை உணரும்போது உடைந்து நீ பலவீனம் அடைகிறாய்...
பலவீனம் உன்னை பாதிக்கிறது.... பாதிப்பிலிருந்து பண்பட கற்றுக்கொள்.. ஒவ்வொரு காயம் ஆறுவதும்.. உனது ஆரோக்கியமே காரணம்....
ஒவ்வொரு தோல்வியும் வெற்றிக்கான ஒரு வேள்வி
வேள்வியில் நீ விரகாய் எரியும்வரை தோல்வியை கண்டு துவளாதே......
பலம் பலவீனம் எல்லாம்
நம் மனம்..உள்ளம் உறுதியானால் உடல் தெளிவாகும்... நம்மை நாம் உணர்ந்தால் உலகம் நம் வசமாகும்.....
இவண்
ஆற்காடு க குமரன்
9789814114