நமது பலம் பலவீனம் இரண்டையும் நாம் அறிவோம் ஆனால் நமது பலவீனத்தை மறந்துவிடுகிறோம்
ஏமாற்றம் என்பது எப்போது உண்டாகிறது எவனையாவது எதற்காவது எதிர் நோக்கும்போது மட்டுமே.....
புறம் மட்டுமே எப்போதுமே
புறம் பேசுகிறது
அகம் எப்போதும் சுகம் தேடுகிறது
மனமறிந்து யாரும் யாருக்கும் துரோகம் நினைக்கவில்லை
கால சூழ்நிலை அவர்களை துரோகியாக காட்டுகிறது துகிலுரித்து நிலை நாட்டுகிறது...
எதிர்பார்த்து ஏமாந்தவன் காயப்பட்டு போகிறான்
என் எதிர்பார்ப்புகள் எல்லாம் எனக்குள்ளே... எனக்குள் இருக்கும் ஆற்றல்கள் எல்லாம் வெளியில் வரட்டும்....
எது நன்மை எது தீமை என்று இந்த உலகுக்கு உணர்த்தட்டும்
உறுப்புகளின் உரசல்தான் உணர்ச்சி பெருக்கல்
அவயங்களை அடக்கு அபாயங்கள் தடுக்கப்படும்
அவயத்தின் அழகு நிலையற்றது..அகம் என்பது அழகானது நிலையானது....
அகத்தின் அழகு தான்
முகத்தின் அழகு
முகப்பூச்சு கூட வேண்டாம் எனக்கு... முகத்திற்கு முகம் பேசினால் போதும்......
வர்ணனைகள் வேண்டாம் எனக்கு என் வலிகளை உணர்ந்தால் போதும்.....
விதித்தது எதுவோ அதை மிதித்து முன்னேறுகிறேன்....மதித்து
நடை போடுகிறேன்....
இவண்
ஆற்காடு க குமரன்
9789814114