எழுதிக் கொண்டே இருக்கும் என்னை எவராவது பைத்தியம் என்றால் எதிர்ப்பே இல்லாமல் ஏற்றுக் கொள்கிறேன்....
பைத்தியத்தின் நிலை... நிலைப்படுதல் ஒன்றே...
பசிவந்தால் கையேந்துவான்
பழி சொல்லும் இழி சொல்லும் தெரியாது அவனுக்கு
எவரையும் ஏளனம் செய்வதில்லை
எவனுக்கும் சேவகமும் செய்வதில்லை
எவனிடமும் சேவையை எதிர்பார்ப்பதில்லை...
எவர் மீதும் பொறாமை கொள்வதில்லை
பொறுமை அவன் சொத்து
சிரிப்பு அவன் வித்து...
சிந்தனை அவன் சத்து
அவன் வாழ்க்கை நிலை பிழன்றதே தவிர அவன் நினைவு என்றென்றும் பிழன்றதில்லை......
சுய நினைவு மட்டும் தான் இல்லையே தவிர சுய உணர்வு உண்டு அவனுக்கு....
மாற்றம் என்பது என்றும் இல்லை ஏமாற்றத்தின் எல்லை...
ஒரே சிந்தனை
ஒரே செயல்
ஒரே பார்வை
ஒரே நிலை
ஆசை என்பது இல்லை அவனுக்குள் ஆதலால் குற்றவாளி ஆவதும் இல்லை.....
பொன்னாசை பொருளாசை
மண்ணாசை பதவி ஆசை
பெண்ணாசை.. என்று பல பைத்தியங்கள் இருக்க
தமிழ் பைத்தியம் நானும்
தவறே இல்லை....
குற்றம் புரிந்து விட்டால் குறிலும்.. குற்றம் கண்டறிந்தால் நெடிலும்.
சற்றும் குறைவில்லாத குரல் உயர்த்தும். கூட்டத்திற்கு நடுவே
மெய் எழுத்தாக என் மெய்யும் உள்ளிருக்கும் உயிர் சேர்ந்து உயிர்மெய்யெழுத்தாக உங்களுக்கு இடையில் எழுதும் பைந்தமிழ் பைத்தியமாக....
ஒரே நிலையில்
ஒரே சிந்தனையில்
முன்னிலையில்
முத்தமிழோடு......
இவண்
ஆற்காடு க குமரன்
9789814114