Type Here to Get Search Results !

முகத்துதி

 எனக்கென்று யாரும் இல்லை என்ற கவலை எப்போதும் எனக்கு இல்லை....


எதிர்படும் எல்லோரும் எப்போதும் போல் புன்னகைக்கிறார்கள்...


வணக்கம் வைக்கிறார்கள் இணக்கத்தோடு இவை அனைத்தும் பரஸ்பரம் பரிமாறிக் கொள்வதே.....


காலம் தவறாமல் நிகழும் நிகழ்வுகள் தான் அத்தனையும் காயப்படுவதற்கும் கவலைப்படுவதற்கும் அவசியம் இல்லை.... ஆயினும் 


வினா தொடுப்பவர்களுக்கு விளங்குமா  விடையளிப்பவனுக்கு சங்கடம் உண்டாகும் என்று....


கண்களைப் பார்த்து உரையாடுங்கள் கண்ணியம் இருக்கும்

இதழினை பார்த்து உரையாடுகையில் காதல் இருக்கும்

இடையினை பார்த்து


 உரையாடுகையில் காமம் இருக்கும்

எதைப் பார்த்து உரையாடுகிறார்கள் என்பதை பொறுத்து என் பதில் இருக்கும்.....


புல்லரித்து போகிறது புலன் விசாரணை.....

காணும் அனைவரும் நலம் விசாரிக்க.....


நடந்து சென்றால் கேட்கிறது வாகனம் எங்கே...பதில் சொல்லி மாளவில்லை பரிட்ச்சயம் கொண்டவர்களின் கேள்விகளுக்கு....


அலுவலகத்தில் காரணம் சொல்கிறேனோ இல்லையோ அறிந்தவர்களிடம் எல்லாம் சொல்ல வேண்டி இருக்கிறது..அந்நாள் விடுமுறைக்கான காரணத்தை.....


உறவை வளர்க்கிறதா உளவு பார்க்கிறதா ஒன்றுமே புரியவில்லை... ஊராரின் கேள்விக்கணை


நம்மை நாம் கண்காணிக்கிறோமோ இல்லையோ நம்மை கண்காணிக்க நம்மைச் சுற்றி  பலர் உளர்.....


நம்மை நாம் ரசிக்கிறோமோ இல்லையோ நம்மை ரசிக்க இந்த உலகம் இருக்கிறது....


ஆண்டவன் பார்க்கிறானோ இல்லையோ அடுத்தவன் பார்த்துக் கொண்டிருக்கிறான் நம் நகர்வுகளை அன்றாட நிகழ்வுகளை....


வீதியோரம் சில வினாடிகள் நின்று பாருங்கள் விலாசம் கேட்டு பலர் வரக்கூடும்.....


அறிமுகமே தேவையில்லை அறியாத முகவரியை அறிந்து கொள்ள...

அனுமதியே தேவையில்லை அடையாளம் கண்டு கொள்ள....


முகமறியாதவர்களிடம் கூட முகவரியை அறிந்து கொள்ள முயல்கிறோம்....


செவி மடுக்க ஆட்கள் உள்ளவரை செத்துப் போவதில்லை மனிதம் இங்கு.....


எவர் பார்வை எப்படி இருந்தால் என்ன நம் பார்வை உண்மையாக இருந்தால் போதும் உளம் நலமாகும் உறவு வளமாகும்.....


இவண்

ஆற்காடு குமரன்

9789814114

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.