உங்களுக்கு நேரம் போகவில்லை என்று பிறர் நேரத்தை களவாடாதீர்கள்
யாருக்கு எவ்வளவு நேரம் என்று யாருக்கும் தெரிவதில்லை...
கால நேரத்தை ஆசைக்கு பயன்படுத்தாதீர்கள் ஆக்கத்திற்கு பயன்படுத்துங்கள்...
கண்ணீர் சிந்த பயன்படுத்தாதீர்கள்.. கருத்தோடு சிந்திக்க பயன்படுத்துங்கள்...
ஆறுதலுக்கு பயன்படுத்துங்கள் அடிமையாக்க பயன்
படுத்தாதீர்கள்...
உரிமையுடன் உரையாடுங்கள் உடைமையை பறித்து விடாதீர்கள்
சுவாசம் நின்று போனால் வாசம்
மாறிப்போகும் வாடையாக....
கணக்கு வைத்துக்கொண்டு செலவு செய்ய வேண்டியது காலத்தை மட்டுமே...
எந்த வித்தியாசமும் இல்லாம எல்லோருக்கும் ஒரே நேரம் தான் கொடுக்கப்பட்டிருக்கிறது.....
மருத்துவமனையில் பார்வை நேரம் என்று ஒன்று இருக்கும்
மருத்துவருக்கும் சரி
நோயாளிக்கும் சரி
மற்ற நேரம் பார்வையில்லாத குருடர்கள் அல்ல.....
இருபத்திநான்கு மணிநேரமும் இயங்கும் மருத்துவமருக்கு இருக்கும் கூட்டத்தை விட
பார்வை நேரம் வைத்து பார்க்கும் மருத்துவருக்கு கூட்டம் அதிகமாக இருக்கும்...
மற்ற நேரங்களில் மருத்துவத்தை மறந்து விடுவதில்லை... அவசரம் என்றாலும் மறுத்து விடுவதில்லை
ஒரே விடயத்தை பதிவிட்டு கொண்டிருந்தால் என்னையும் விலக்கி வைக்கும் இந்த சமுதாயம்.....
ஆசை வார்த்தைகள் உன்னை அடிமையாக்கும் ஆக்கப்பூர்வமான வார்த்தைகள் மட்டுமே உனக்குள் ஆற்றலைப் பெருக்கும்.....
காலம் பொன் போன்றது அதை அடகு வைத்து விடாதே மீட்கவும் முடியாது... நம்மால் மீளவும் முடியாது.......
கலந்துரையாடல் தவறில்லை புதிய புதிய கருத்துக்கள் உருவாகும்....
காலம் கடந்து கொண்டே இருக்கிறது நானும் பல கருத்துக்களை பதிவிட வேண்டும்
பொழுது போவதே தெரியவில்லை என்று புலம்புவன் உழைப்பாளி..... பொழுது போகவில்லை என்று புலம்புபவன் சோம்பேறி..... பொழுதை சரியாக பயன்படுத்துபவர் அறிவாளி.....
காலம் என்பது எல்லோருக்கும் பொதுவானது.... பயன்படுத்தும் விதத்தில் பண்படுத்தும் நம்மை
புண்படுத்தும் ...
காலம் கடந்து கொண்டிருக்கிறது அடுத்த கருத்தை பதிவு செய்ய வேண்டும்...
நன்றி வணக்கம்
இவண்
ஆற்காடு க குமரன்
9789814114